இந்தியா
விஜய்க்கு மக்கள் செல்வாக்கு அதிகம்.. அதனால் உதயநிதி ஸ்டாலினுக்கு பதற்றம்.. சொல்றது யார் தெரியுமா?
விஜய்க்கு மக்கள் செல்வாக்கு அதிகம்.. அதனால் உதயநிதி ஸ்டாலினுக்கு பதற்றம்.. சொல்றது யார் தெரியுமா?
உதயநிதி சினிமாவில் நடிகராக இருந்து அரசியலில் ஈடுபட்டு, அரசியலிலும் வெற்றி பெற்றார். இதையடுத்து துணை முதல்வராக அவர் பொறுப்பேற்றார். திமுகவின் இளைஞரணி செயலாளராக இருந்து, எம்.எல்.ஏவாக பொறுப்பேற்று, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
அதன்பின், கட்சியின் பொறுப்புகள், மாநாட்டை சிறப்பாக நடத்தியது, மழை, புயல் என இயற்கை பேரிடர்களின் போது, சிறப்பாக செயல்பட்ட்தாக திமுகவினர் உதயநிதியைப் பாராட்டினர்.
சமீபத்தில் விஜய் பற்றி அவரிடம் ஊடகங்கள் கேட்டபோது அவர் கூறிய பதில் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
பிரபல யூடியூப் சேனலில் தொகுப்பாளர், உதயநிதியிடன் எதோ பதற்றம் இருக்கிறதே என கேள்வி எழுப்பினார். இதற்கு பிஸ்மி, ’’உதயநிதியைப் பொறுத்தளவில் ரொம்ம நிதானமான கேரக்டர்.
அவர்களின் குடும்பத்தின் உதயநிதி, அருள்நிதி அபூர்வமான கேர்கடர்கள். துணை முதல்வர் ஆன பின், மற்ற அமைச்சர்கள் டம்மி ஆக்கப்பட்டு, உதயநிதி எல்லாவற்றையும் பார்ப்பார் என அவர் சுழன்று வருகிறார்.
அவரை முதல்வருக்கு தகுதியான நபராக உருவாக்கி வருகின்றனர். அவர் காலையில் ஆரம்பித்து, இரவுவரை செயல்படும் போது, அவருக்கு பிரஸ்ஸர் ஏற்படுத்தியுள்ளது.
இத்தனை பணிகளுக்கு மத்தியில் மக்கள் செல்வாக்கு மிக்க விஜயின் வருகை பதற்றம் ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின், தன் மகன் உதயநிதியை துணை முதல்வராக ஆக்கியது முதல்வர் ஆக்குவதற்குத்தான்.
இதைதான் ஆதவ் அர்ஜூனா மன்னராட்சி என்று குறிப்பிட்டார். அவர் கூறிய விமர்சனத்தை நான் வரவேற்கிறேன்’’ என்று கூறினார்.