Connect with us

சினிமா

மகாராஜா படத்தின் இயக்குனர் நிதிலனுக்கு BMW கார் பரிசு… தயாரிப்பு நிறுவனம் கவுரவித்தது…

Published

on

மகாராஜா படத்தின் இயக்குனர் நிதிலனுக்கு BMW கார் பரிசு… தயாரிப்பு நிறுவனம் கவுரவித்தது…

Loading

மகாராஜா படத்தின் இயக்குனர் நிதிலனுக்கு BMW கார் பரிசு… தயாரிப்பு நிறுவனம் கவுரவித்தது…

மகாராஜா படத்தின் இயக்குனருக்கு படத்தின் தயாரிப்பு நிறுவனம் BMW காரை பரிசாக அளித்து கவுரவப்படுத்தியுள்ளது.

Advertisement

விஜய் சேதுபதி நடிப்பில் நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் மகாராஜா என்ற திரைப்படம் கடந்த ஜூன் மாதம் வெளியானது. இந்த திரைப்படம் விஜய் சேதுபதியின் 50-ஆவது படமாகும். அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தாமல் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். இந்தியாவில் மட்டும் இந்த திரைப்படம் 120 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு சீனாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் ஒட்டுமொத்தமாக மகாராஜா திரைப்படம் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை ஜப்பான் நாட்டிலும் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement

இதையும் படிங்க –

இந்த நிலையில் படத்தின் இயக்குனர் நிதிலன் சுவாமிநாதனுக்கு தயாரிப்பு நிறுவனம் BMW காரை பரிசாக வழங்கி கவுரவித்துள்ளது.

#Maharaja director @Dir_Nithilan
Sir 👏❤🤗😇 producer gift 🎁 @bmwindia car 🚘 @PassionStudios_ @Sudhans2017 @ThinkStudiosInd @Jagadishbliss @Karthikravivarm #Maharaja #maharajainchina pic.twitter.com/wLUhod2eoI

Advertisement

இந்த கார் சுமார் ரூ. 80 லட்சம் மதிப்புடையது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பி.எம்.டபிள்யூ காரை படத்தின் நாயகன் விஜய் சேதுபதியிடம் இருந்து இயக்குனர் நிதிலன் சாமிநாதன் பெற்றுக் கொண்டார்.

மகாராஜா திரைப்படம் ஓ.டி.டி. தளத்திலும் அதிக வியூசை குவித்து வருகிறது. இந்த படத்தை முன்னணி ஓடிடி தளமான நெட் பிலிக்ஸ் வெளியிட்டுள்ளது

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன