Connect with us

உலகம்

கடவுச்சீட்டு தரவரிசையில் ஐக்கிய அரபு இராச்சியம்  முதலிடம்!

Published

on

Loading

கடவுச்சீட்டு தரவரிசையில் ஐக்கிய அரபு இராச்சியம்  முதலிடம்!

2024ஆம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த கடவுச் சீட்டுக்கள் தொடர்பான தரவரிசை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில்  உலகின் சக்திவாய்ந்த கடவுச் சீட்டைக்  கொண்ட நாடாக, நான்காவது முறையாகவும்  ஐக்கிய அரபு இராச்சியம்  முதலிடத்தை பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் கடவுச் சீட்டை வைத்திருப்பவர்கள் உலகின் 90 சதவீத பகுதிகளை அணுக முடியும் எனவும்,  அவர்கள் 133 நாடுகளை விசா இல்லாமல் சென்றடைய முடியும்  என்றும்  47 நாடுகளில் விசா-ஒன்-அறைவல் மூலம் அனுமதி பெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதேவேளை,  ஐரோப்பிய நாடுகள் முதல் 20 இடங்களில் 19 இடங்களை பிடித்துள்ளன  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஸ்பெயின் 2 ஆவது இடத்தையும், பின்லாந்து மூன்றாவது இடத்தையும், பிரான்ஸ் 4 ஆவது இடத்தையும் பிடித்துள்ளதுடன், இப்பட்டியில் பிரித்தானியா 32 ஆவது இடத்தைப் பிடித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் கடவுச் சீட்டை வைத்து  125 நாடுகளுக்கு  மாத்திரமே விசா இல்லாமல் செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (ச)

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன