இலங்கை
டேர்னினேட்டர் தொடர்பில் உறுதியான தகவல் கிடைக்கவில்லை – பொலிஸ் தெரிவிப்பு!

டேர்னினேட்டர் தொடர்பில் உறுதியான தகவல் கிடைக்கவில்லை – பொலிஸ் தெரிவிப்பு!
கொழும்பில் இஸ்ரேலிய சிப்பாய் கால் ஃபெரன்புக் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இந்த விவகாரம் குறித்து தங்களுக்கு உறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
‘டெர்மினேட்டர்’ என்று அழைக்கப்படும் ஃபெரன்புக், பாலஸ்தீனிய குடிமகன் ஒருவரின் சாவிற்கும், உடலை இழிவுபடுத்தியதற்கும் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது.
கடந்த வாரம், பெல்ஜியத்தை தளமாகக் கொண்ட ஹிந்த் ரஜப் அறக்கட்டளை, ஃபெரன்புக்கின் புகைப்படத்தை வெளியிட்டு, இலங்கை அதிகாரிகள், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) மற்றும் இன்டர்போல் ஆகியோரைக் கொலையில் ஈடுபட்டதற்காக அவரைக் கைது செய்யுமாறு முறையிட்டதாக உறுதிப்படுத்தியது. (ப)