Connect with us

உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு தேர்தல்? – இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ் தகவல்

Published

on

வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு தேர்தல்? - இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ் தகவல்

Loading

வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு தேர்தல்? – இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ் தகவல்

வங்கதேசத்தில் இந்த ஆண்டின் துவக்கத்தில் ஏற்பட்ட அரசுக்கு எதிரான கிளர்ச்சியின் காரணமாக அந்நாட்டு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. அதனைத் தொடர்ந்து ஷேக் ஹசீனா, வங்கதேசத்தில் இருந்து தப்பி வெளியேறினார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமலுக்கு வந்தது. அதன்பிறகு, முகமது யூனுஸ் தலைமையில் வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2026- ஆம் ஆண்டு தொடக்கத்தில் பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டு இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுடனான போரில் வங்கதேசம் வெற்றி பெற்ற தினத்தை முன்னிட்டு வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ், நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றினார். அப்போது அவர், “தேர்தலை நடத்தும் முன் சீர்திருத்தங்கள் தேவை. வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட குறைந்தபட்ச சீர்திருத்தங்களை அரசியல் கட்சிகள் ஏற்றுக்கொண்டால், அடுத்த ஆண்டு நவம்பரில் தேர்தலை நடத்த முடியும்” என்று தெரிவித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன