இந்தியா
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெறுமா? வானிலை அப்டேட்!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெறுமா? வானிலை அப்டேட்!
சென்னையில் இன்று (டிசம்பர் 24) காலை லேசான மழை பெய்த நிலையில் குளிர்ந்த வானிலை நிலவுகிறது.
தமிழகத்தில் கடந்த 24 நான்கு மணி நேரத்தில் தூத்துக்குடி மற்றும் மதுரையில் மிதமான மழை பெய்துள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரை அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1° செல்சியஸும், குறைந்தபட்சமாக ஈரோட்டில் 16.2° செல்சியஸும் பதிவானது.
இந்த நிலையில் சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (24-12-2024) காலை 8.30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், தெற்கு ஆந்திர-வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது.
மேலும் இது மேற்கு – தென்மேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் வலுவிழக்கக்கூடும்.
24-12-2024: வடதமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், இதர தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
25-12-2024: வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
24-12-2024 மற்றும் 25-12-2024: வடதமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
24-12-2024: தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
25-12-2024: மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், வடதமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்”