Connect with us

இந்தியா

குழந்தை திருமணத்திற்கு எதிராக அசாம் மாநிலத்தில் 413 பேர் கைது!

Published

on

Loading

குழந்தை திருமணத்திற்கு எதிராக அசாம் மாநிலத்தில் 413 பேர் கைது!

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் குழந்தை திருமணத்திற்கு எதிரான மூன்றாவது கட்ட நடவடிக்கையில் நானூற்று பதினாறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் 335 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் கைதானவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

Advertisement

சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய விளைவுகளை முடிவுக்குக் கொண்டுவர நாங்கள் தொடர்ந்து துணிச்சலான நடவடிக்கைகளை எடுப்போம் என முதலமைச்சர் ஹிமாந்த தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மற்றும் ஒக்டோபர் மாதங்களில் குழந்தை திருமணத்திற்கு எதிரான இயக்கத்தை மாநில அரசு இரண்டு கட்டங்களாகத் தொடங்கியது.

பெப்ரவரி மாதத்தில் முதற்கட்டமாக 3,483 பேர் கைது செய்யப்பட்டு, 4,515 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில்
915 பேர் கைது செய்யப்பட்டனர்.

Advertisement

மேலும் ஒக்டோபர் மாதம் இரண்டாம் கட்டமாக 710 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

அசாம் மாநிலத்தில் தாய் மற்றும் குழந்தை இறப்பு விகிதம் அதிகரிப்பதற்கு குழந்தை திருமணமே மிகப்பெரிய காரணம் என்று மாநில அரசு தெரிவிக்கிறது.

அசாமில் சட்டபூர்வ திருமண வயதான 18 வயதுக்கு முன் திருமணம் செய்துகொள்ளும் பெண்களின் எண்ணிக்கை சுமார் 32 சதவீதம் என்றும் தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் தரவுகளை மேற்கோள்காட்டி கூறப்படுகிறது.

Advertisement

மாநிலத்தில் சுமார் 12 சதவீத பெண்கள் வயது முதிர்வை அடைவதற்கு முன்பே கர்ப்பமாகின்றனர். இந்த இரண்டு புள்ளிவிபரங்களும் தேசிய சராசரியை விட அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.

மாநில அரசு அனுமதி வழங்கியதன் பின்னர் அசாம் பொலிஸார், குழந்தை திருமணங்களில் ஈடுபட்டதாகவோ அல்லது நடத்துவதாகவோ குற்றம் சுமத்தப்பட்டவர்களை கைது செய்யத் தொடங்கினர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன