Connect with us

இந்தியா

எப்.ஐ.ஆர் லீக் விவகாரம் : தமிழக டிஜிபிக்கு பறந்த உத்தரவு!

Published

on

Loading

எப்.ஐ.ஆர் லீக் விவகாரம் : தமிழக டிஜிபிக்கு பறந்த உத்தரவு!

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை பகிரங்கமாக வெளிப்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் கோட்டூர்புரம் போலீசார் பதிவு செய்த எஃப்ஐஆர் இணையத்தில் வெளியானது.

Advertisement

பாலியல் வன்கொடுமை வழக்கில் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் எப்படி வெளியானது என்று பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதில் அண்ணாமலை இமெயில் வாயிலாக தேசிய மகளிர் ஆணையத்துக்கும் புகார் அனுப்பினார்.

அதில், “முதல் தகவல் அறிக்கையின் நகல் மூலம் பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளம் மற்றும் அவரது வீட்டின் முகவரியை பகிர்ந்துள்ளனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளது.

Advertisement

எனவே மாணவியின் அடையாளத்தை பொதுமக்களுக்கு வெளிப்படுத்தும் இத்தகைய செயலில் ஈடுபட்ட நபர்கள் மீதும் மாநில காவல்துறையினர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்தநிலையில் தேசிய மகளிர் ஆணையம், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.

தொடர்ந்து தமிழக டிஜிபிக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Advertisement

அதில், “இந்த கொடூரமான செயலை தேசிய மகளிர் ஆணையம் வன்மையாக கண்டிக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் நீதிக்கான போராட்டத்தில் துணை நிற்கிறோம்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர், தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. ஆனால் தமிழ்நாடு காவல்துறை அவர் மீதான முந்தைய வழக்குகளில் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது. இந்த அலட்சியம் தான் அவரை இது போன்ற குற்றங்களைச் செய்ய தூண்டியுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவது பற்றிய கவலையை எழுப்புகிறது.

பாதிக்கப்பட்ட அந்த பெண்ணிற்கு இலவச மருத்துவ மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கடுமையான தண்டனை வழங்கப்படக் கூடிய பிஎன்எஸ் 2023ன் சட்டப்பிரிவு 71ஐ எஃப்ஐஆர்-இல் சேர்க்க வேண்டும்.

Advertisement

பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தியதற்காகவும் சட்டப்பிரிவு 72ஐ மீறியதற்காகவும் அதிகாரிகள் மீது தமிழக டிஜிபி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தேசிய மகளிர் ஆணைய தலைவர் விஜய ரஹாத்கர் உத்தரவிட்டுள்ளார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன