இந்தியா
காலமானார் மன்மோகன் சிங்

காலமானார் மன்மோகன் சிங்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92.
வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நல பிரச்சினையால் இன்று (டிசம்பர் 26) இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் ஐசியுவுக்கு மாற்றப்பட்டார். அவர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியான நிலையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு விரைந்தனர்.
இந்த நிலையில், அனைத்து முயற்சிகள் எடுத்தும் இன்று இரவு 9.51 மணிக்கு மன்மோகன் சிங் காலமானார் என்று எய்ம்ஸ் மருத்துவமனை கூறியுள்ளது.
2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டுகளாக நாட்டின் பிரதமராக பணியாற்றியவர் மன்மோகன் சிங். நாட்டின் பொருளாதார சீர்திருத்தங்களில் முக்கிய பங்காற்றியவர்.
இந்தியாவின் முதல் சீக்கிய பிரதமர் என்ற பெருமையையும் பெற்றவர்.
செப்டம்பர் 26, 1932 இல், மேற்கு பஞ்சாபில் உள்ள காஹ் கிராமத்தில் பிறந்தவர் மன்மோகன் சிங்.
எப்.ஐ.ஆர் லீக் விவகாரம் : தமிழக டிஜிபிக்கு பறந்த உத்தரவு!
என்ன எப்.ஐ.ஆர் இது… வெட்கமில்லையா? சாட்டையடி போராட்டத்தை அறிவித்த அண்ணாமலை