இந்தியா
‘ஒரு சிறந்த மனிதர், உண்மையான நண்பர்’ : மன்மோகன் சிங் மறைவுக்கு உலகத் தலைவர்கள் அஞ்சலி!

‘ஒரு சிறந்த மனிதர், உண்மையான நண்பர்’ : மன்மோகன் சிங் மறைவுக்கு உலகத் தலைவர்கள் அஞ்சலி!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையடுத்து அவரது சர்வதேச பங்களிப்புகள் குறித்து உலக தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நிதி அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர், பிரதமர் என பல்வேறு பொறுப்புகள் வகித்த டாக்டர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி காலமானார். (வயது 92). இதையடுத்து உலகத் தலைவர்களிடமிருந்து இதயப்பூர்வமான புகழஞ்சலிகள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளன.
என் மதிப்பிற்குரிய மற்றும் அன்பான நண்பரான டாக்டர் மன்மோகன் சிங் காலமானார் என்ற செய்தியில் துக்கத்தின் எடை என்னை அழுத்துகிறது. ஊழலுக்கு எதிரான உறுதியான தலைவர் மற்றும் மாற்றத்திற்கான கொள்கைகளின் முன்னோடி. 1990களில் நாங்கள் இருவரும் நிதியமைச்சர்களாகப் பணியாற்றிய போது, அவரது புரட்சிக்கர கொள்கைகளின் ஆரம்ப ஆண்டுகளை நேரில் பார்க்கும் அரிய பாக்கியம் எனக்குக் கிடைத்தது. ஊழலுக்கு எதிரான போரில் நாங்கள் தீவிரமான உறுதிப்பாட்டை பகிர்ந்து கொண்டோம்.
மன்மோகன் சிங், அரசியல்வாதி என்பதை விட நேர்மையானவர் மற்றும் உறுதியானவர். அடுத்த தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும் ஒரு பாரம்பரியத்தை விட்டுச் செல்கிறார்.
மலேசியர்களுக்கு கூட தெரியாத செய்தியை சொல்கிறேன். நான் சிறையில் இருந்தபோது, அவர் எனது மகன் இஹ்சானுக்கு உதவித்தொகை வழங்கினார். நான் அவரது கருணையை நிராகரித்திருந்தாலும், அத்தகைய செயல்சந்தேகத்திற்கு இடமின்றி அவரின் அசாதாரண மனிதாபிமானத்தையும் பெருந்தன்மையையும் காட்டியது.
எனது சிறைவாசத்தின் போது அவர் எனக்கு ஒரு உண்மையான நண்பராக இருந்தார். இது என் இதயத்தில் என்றென்றும் நிலைத்திருக்கும். குட் பை மன்மோகன்.
டாக்டர் மன்மோகன் சிங் மறைவால் இந்தியா ஒரு சிறந்த மனிதரையும், பிரான்ஸ் ஒரு உண்மையான நண்பரையும் இழந்துவிட்டது. அவர் தனது வாழ்நாளை நாட்டிற்காக அர்ப்பணித்தவர். எங்கள் எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் இந்திய மக்களுடனும் உள்ளது.
இந்திய அரசுக்கும், டாக்டர் மன்மோகன் சிங்கின் குடும்பத்தினருக்கும், உலகெங்கிலும் உள்ள அவரது எண்ணற்ற ஆதரவாளர்களுக்கும் இலங்கை மக்கள் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் ஒரு தொலைநோக்கு தலைவர். அவரது செல்வாக்கு தேசிய எல்லைகளை கடந்தது. 2004 முதல் 2014 வரை பிரதமராக இருந்தபோது, கல்விக்கான உரிமைச் சட்டம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் போன்ற அவரது புரட்சிகரமான கொள்கைகள் அவரது உறுதியான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
சர்வதேச ஒத்துழைப்பில் அவர் அயராத அடையாளமாக நீடித்த கூட்டணிகளை உருவாக்கினார், பிரிக்ஸ் போன்ற கூட்டணிகளுக்கு பங்களித்தார்.
மேலும் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் போன்ற சாதனைகள் மூலம் குறிப்பிடத்தக்க இராஜதந்திரத்தை வெளிப்படுத்தினார். அவரது பணிவு, அறிவுத்திறன் மற்றும் பொது சேவையில் அர்ப்பணிப்பு ஆகியவை எதிர்கால சந்ததியினருக்கு என்றென்றும் ஊக்கமளிக்கும். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.
எனக்கு 1992 முதல் மன்மோகன் சிங்கை தெரியும், அவர் ஒரு நல்ல நண்பர். நவீன இந்தியாவை வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றிய தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் மறைவு ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர், அவரது விவேகம், பணிவு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை இந்தியாவை வடிவமைத்து, பிராந்தியத்தை ஊக்கப்படுத்தியது. ஜனநாயகம் மற்றும் நீடித்த நட்பை போற்றிய அவரை நேபாளம் என்றென்றும் நினைவில் வைத்திருக்கும்.
மன்மோகன் சிங்கின் மனைவி குர்சரண் கவுருக்கு தலாய் லாமா இரங்கல் தெரிவித்து உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், ”உங்கள் கணவர் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற வலுவான விருப்பத்தால் தூண்டப்பட்டார். இந்தியாவின் வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு, குறிப்பாக அதன் பொருளாதார வளர்ச்சிக்கு, இந்திய மக்களின் நிலையை மேம்படுத்துவதில் அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தார். எனக்கு அவர் மூத்த சகோதரர் போன்றவர். அவர் திபெத்திய மக்களுக்கு நல்ல நண்பராகவும் இருந்தார். 92 ஆண்டுகளாக அவர் உண்மையிலேயே அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்தார் என்று நாம் மகிழ்ச்சியடையலாம். நம் அனைவருக்கும் அவர் ஒரு உத்வேகமாக வாழ்ந்தார்.
ரஷ்யா, அமெரிக்கா, சீனா, ஈரான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் மன்மோகன் சிங் உடலுக்கு இன்று நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இது இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் சோகமான தருணம். நமது இருதரப்பு உறவுகளுக்கு டாக்டர் மன்மோகன் சிங்கின் பங்களிப்பு அளவிட முடியாதது. அவரது மென்மையான நடத்தையும், பொருளாதார நிபுணராக அவரது நிபுணத்துவம் மற்றும் அவரது அர்ப்பணிப்பு ஆகியவை சந்தேகத்திற்கு இடமின்றி எப்போதும் விரும்பத்தக்கதாக இருந்தது.
அமெரிக்க-இந்திய உறவில் வரலாற்று அத்தியாயத்தை ஏற்படுத்திய அன்பு நண்பரும் முன்னாள் பிரதமருமான டாக்டர் மன்மோகன் சிங்கின் தன்னலமற்ற பங்களிப்பை நினைவு கூர்கிறோம். இந்தியாவின் வளர்ச்சி மற்றும் செழுமைக்கான அவரது அர்ப்பணிப்பு எங்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது. அவரது தலைமை மற்றும் தொலைநோக்கு பார்வைக்கு நன்றி.
இந்திய மக்களால் பரவலாக மதிக்கப்படும் ஒரு சிறந்த தலைவர் டாக்ட மன்மோகன் சிங். அவரது மறைவு ஆழ்ந்த வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், அன்புக்குரியவர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
மன்மோகன் சிங் 2004 முதல் 2014 வரை இரண்டு முறை இந்தியாவின் பிரதமராக பணியாற்றினார். மேலும் அஅவரது பதவிக் காலத்தில் பல்வேறு பொருளாதார சீர்திருத்த சட்டங்களை கொண்டு வந்தார்.
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் டெல்லியில் நாளை காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் நடைபெற உள்ளது.