Connect with us

இந்தியா

நாளை விஜயகாந்த் குருபூஜை… இன்று விஜய்க்கு அழைப்பு!

Published

on

Loading

நாளை விஜயகாந்த் குருபூஜை… இன்று விஜய்க்கு அழைப்பு!

விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நாளை குருபூஜை நடத்தப்பட உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை இன்று (டிசம்பர் 27) நேரில் சந்தித்து தேமுதிக நிர்வாகிகள் நேரில் அழைப்பு விடுத்தனர்.

தேமுதிக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது உடல் கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டது.

Advertisement

விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடமான கேப்டன் ஆலயத்தில் தேமுதிக சார்பில் குருபூஜை நடத்தப்பட உள்ளது.

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து விஜயகாந்த் குருபூஜை அழைப்பிதழை தேமுதிக மாநில துணைப் பொதுச் செயலாளர் எல்.கே.சுதிஷ் நேரில் சந்தித்து இன்று வழங்கினார்.

அவருடன் தே.மு.தி.க. துணைப் பொதுச் செயலாளர் ப. பார்த்தசாரதி, விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement

முன்னதாக தமிழக முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மதிமுக தலைவர் வைகோ, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாஜக தலைவர் அண்ணாமலை, தமாகா தலைவர் ஜி. கே. வாசன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது.

!

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன