சினிமா
விடா முயற்சி ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்: வைப் மோடில் அஜித் ரசிகர்கள்… ’சவதீகா’ என்றால் என்ன தெரியுமா?

விடா முயற்சி ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்: வைப் மோடில் அஜித் ரசிகர்கள்… ’சவதீகா’ என்றால் என்ன தெரியுமா?
அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் ‘சவதீகா’ பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று (டிசம்பர் 27) வெளியாகி உள்ளது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி வரும் ஜனவரி 10ஆம் தேதி வெளியாக உள்ளது.
படம் வெளியாக இன்னும் 15 நாட்களுக்கும் குறைவாக உள்ள நிலையில், இன்று அனிருத் இசையில் படத்தின் முதல் முதல் பாடலான Sawadeeka (சவதீகா) என்ற பாடல் இன்று மாலை வெளியாகி உள்ளது.
அனிருத்தின் செலிபிரேஷன் பாடல்கள் லிஸ்டில் புது வரவாக ‘Sawadeeka’ பாடல், கேட்கும் நம்மையும் துள்ளல் போட வைக்கிறது.
மேலும் ட்ரெண்டிங்கில் உள்ள ‘இருங்க பாய்’ உள்ளிட்ட வார்த்தைகள் இடம்பெற்றுள்ள தெருக்குறள் அறிவு எழுதியுள்ள இப்பாடல் வரிகள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
திருமணம் செய்தவர்களுக்கு அறிவுரை கூறும் பாடலாக அமைந்துள்ள இந்த பாடலில் ’Sawadeeka’ வார்த்தையும் இடம்பெற்றுள்ளது. ’சவதீகா’ என்றால், தாய்லாந்து மொழியில் ‘வணக்கம்‘ என்று அர்த்தமாம்.
சவதீகா பாடலால் அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ள நிலையில், புத்தாண்டையொட்டி விடாமுயற்சி படத்தின் டிரெய்லர் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.