சினிமா
வைரலாகும் அஜித் டான்ஸ்! அது அஜித் இல்லை என் அப்பா! உண்மையை போட்டுடைத்த பிரபலம்!

வைரலாகும் அஜித் டான்ஸ்! அது அஜித் இல்லை என் அப்பா! உண்மையை போட்டுடைத்த பிரபலம்!
பிரபல நடிகர் அஜித் சமீபத்தில் பேட்மிண்டன் வீராங்கனை சிந்து திருமணத்தில் கலந்து கொண்டு டான்ஸ் ஆடிய வீடியோ சோசியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது. இந்நிலையில் உண்மையிலே அஜித் டான்ஸ் ஆடினாரா? என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள். அதன் உண்மை விளக்கம் குறித்து பார்ப்போம் பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்துவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அஜித் குமார் அவரது மனைவி ஷாலினி உட்பட குடும்பத்தினர் கலந்துகொண்டனர். அந்த புகைப்படங்கள் கூட சோசியல் மீடியாவில் வைரலானது. இப்படி இருக்க அந்த திருமணத்தில் நடிகர் அஜித் குமார் “ஊ சொல்றியா மாமா” பாடலுக்கு நடனமாடியது போன்ற ஒரு வீடியோவை நெட்டிசன்கள் அதிகளவில் வைரலாக்கி வருகின்றனர். அந்த வீடியோவை பார்த்த பலரும் அஜித் குமாரா இப்படியொரு ஆட்டத்தை போட்டுள்ளார் என ஆச்சர்யத்தில் வீடீயோவை ஜூம் செய்தும் பார்த்து வருகின்றனர். அவரின் ரசிகர்கள் இது அஜித் சார் தான் என்று வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர். இந்நிலையில் இது உண்மை இல்லை என்று இசைகலைஜர் அஞ்சலி மாலியா சொல்லி இருக்கிறார். அதாவது “கடந்த வருடம் அவரது திருமணத்தின் போது மாலியாவின் தந்தை ஆடிய வீடியோ தான் அது அப்போதே நல்ல வைரலானது. இப்போது அஜித் சார் அதே லுக்கில் இருப்பதால் இந்த வீடியோ மறுபடி சோசியல் மீடியாவில் ஷேர் ஆகி வருகிறது” என்று கூறி பலரது குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.