Connect with us

பொழுதுபோக்கு

வில்லன் நடிகர் கோபத்தில் சொன்ன வார்த்தை: கோர்ட்டில் வைத்து கண்ணதாசன் எழுதிய ஹிட் பாட்டு!

Published

on

kannadasan Asmj

Loading

வில்லன் நடிகர் கோபத்தில் சொன்ன வார்த்தை: கோர்ட்டில் வைத்து கண்ணதாசன் எழுதிய ஹிட் பாட்டு!

சிவாஜி நடித்த ஒரு படத்திற்கு அனைத்து பாடல்களையும் எழுதிக்கொடுத்த கவியரசர் கண்ணதாசன், ஒரு பாடலை மட்டும் எழுதிக்கொடுக்க தாமதமாக்கிய நிலையில், இதனால் கோபமான வில்லன் நடிகர் சொன்ன ஒற்றை வார்த்தையால் அந்த பாடல் உருவாகி பெரிய வெற்றியை பெற்றுள்ளது.தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் பல படங்களை கொடுத்தவர் பி.எஸ்.வீரப்பா. பல முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களைய தயாரித்துள்ள இவர் கடந்த 1962-ம் ஆண்டு, கே.சங்கர் இயக்கத்தில் ஆலயமணி என்ற படத்தை தயாரித்திருந்தார். சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், சரோஜா தேவி, விஜயகுமாரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையமைக்க, கவியரசர் கண்ணதாசன் அனைத்து பாடல்களையும் எழுதியிருந்தார். இந்த படத்தில் தனது மனைவி சரோஜா தேவி, திருமணத்திற்கு முன்பு எஸ்.எஸ்.ராஜேந்திரனை காதலித்தை தெரிந்துகொண்ட சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ஆரை கொல்ல முயற்சி செய்வார். இந்த முயற்சி தோல்வியில் முடியவே எஸ்.எஸ்.ஆர் உயிர்பிழைத்து உண்மை என்ன என்பதை சிவாஜியிடம் சொல்வார்.அவர் சொன்ன உண்மையால், தனது தவறை உணர்ந்த சிவாஜி தனது நண்பனையே கொலை செய்ய துணிந்துவிட்டோமே என்ற குற்றஉணர்ச்சியில் மலையில் இருந்து விழுந்து தற்கொலை செய்துகொள்ள முயற்சிப்பார். அவரை ஒரு மீனவன் காப்பாற்றிவிடுவார். அதன்பிறகு தனது உடல்நிலை சரியான சிவாஜி தனது சொத்தக்களை மறந்து அந்த குடிசை வீட்டிலேயே தங்கிவிடுவார். அப்போது அவர் தனது தவறை உணர்ந்து பாடுவது போல் ஒரு பாட்டு தேவைஇந்த ஒரு பாட்டை அவர் எழுதி கொடுத்தால் படம் முடிந்துவிடும் என்ற நிலையில், அரசியலில் கண்ண்தாசன் அப்போது ஈடுபட்டுடன் இருந்ததால் கோர்ட், கேஸ் என்று அலைந்துகொண்டிருந்த கண்ணதாசன், இந்த பாடலை எழுத தாமதப்படுத்திக்கொண்டே இருந்துள்ளார்.ஒரு கட்டத்தில் கோபமான அப்படத்தின் தயாரிப்பாளர் பி.எஸ்.வீரப்பா கண்ணதாசனின் வீட்டுக்கே சென்று இந்த பாடலை எழுதி கொடுக்க கேட்டுள்ளார்.இன்று கோர்ட்டில் ஒரு கேஸ் இருக்கிறது அதை முடித்துவிட்டு இரவில் வந்து எழுதி தருகிறேன் என்று கண்ணதாசன் சொல்ல,  என்ன கவிஞரே ஒரு பாட்டு எழுத 20 நாட்கள் அலையவிட்டு இருக்கீங்களே, சட்டி சுட்டுது கை விட்டது என்று எழுதி கொடுக்கறதா விட்டுட்டு என்று கோபமாக பேசியுள்ளார். இதை கேட்ட கண்ணதாசன் இரவு எட்டரை மணிக்கு பாடல் வரும் என்று சொல்லிவிட்டு கிளம்பியுள்ளார்.அதன்பிறகு பி.எஸ்.வீரப்பா சொன்ன வார்த்தையும், கண்ணதாசனின் அப்போதைய நிலையும் அவருக்கு மனதிற்கு வந்து வந்து சென்றுள்ளது. கோர்ட்டில் தனது கேஸ் வருவதற்கு முன்பு கிடைத்த இடைவெளியில் இந்த பாடலை கண்ணதாசன் எழுதி முடித்துள்ளார். இந்த பாடல் படக்குழுவுக்கு செல்ல, இதை வாங்கி படித்த பி.எஸ்.வீரப்பாவுக்கு, பெரிய ஆச்சரியம். அவர் தற்செயலாக சொன்ன சட்டி சுட்டது கைவிட்டது என்ற வார்த்தையை பயன்படுத்தியே அவர் பாடலை எழுதியிருந்தார்.இந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இறப்பு நடந்த வீட்டில் இந்த பாடல் ஒலிக்காமல் இருக்காது என்று சொல்லும் அளவுக்கு காலம் கடந்து இந்த பாடல் நிலைத்திருக்கிறது.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன