சினிமா
கற்றுத்தந்த பாடங்களுக்கு நன்றி! மணிமேகலை பகிர்ந்த இறுதி புகைப்படங்கள் வைரல்!

கற்றுத்தந்த பாடங்களுக்கு நன்றி! மணிமேகலை பகிர்ந்த இறுதி புகைப்படங்கள் வைரல்!
விஜே. மணிமேகலை சிறந்த தொகுப்பாளினியாக வலம் வருபவர். எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது இன்ஸ்டாகிராமில் இறுதி புகைப்படங்கள் என்று சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜே. மணிமேகலை விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். விஜே பிரியங்காவிற்கும் தனக்கும் இடையே நடந்த பிரச்சினையால் விஜய் டிவி தொலைக்காட்ச்சியை விட்டு வெளியேறினார். இந்த விடையம் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது ஓய்ந்துள்ளது. இந்நிலையில் தொடர்ந்து புது வீடு கட்டுவது, கார் வாங்குவது, ஊர்சுற்றுவது என ஜுலியாக இருக்கிறார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் இந்த ஆண்டின் இறுதி சன்டே, 2024 கற்றுத்தந்த பாடங்களுக்கு நன்றி 2025தை அழகாய் வரவேற்போம் என்று பதிவிட்டு புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இவருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை கூறிவருகிறார்கள். அவர் ஷேர் செய்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.