Connect with us

இந்தியா

தூத்துக்குடியில் ஸ்டாலின் : உற்சாக வரவேற்பு!

Published

on

Loading

தூத்துக்குடியில் ஸ்டாலின் : உற்சாக வரவேற்பு!

தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று (டிசம்பர் 29) கள ஆய்வு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் மக்கள் நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு முறையாக கிடைக்கின்றதா என்பதை மாவட்டம் வாரியாக நேரில் பார்வையிட்டு முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

Advertisement

கடந்த மாதம் கோவை, விழுப்புரம் மாவட்டங்களில் ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொண்டார். இந்தநிலையில், இன்றும் நாளையும் தூத்துக்குடி, கோவை மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்கிறார்.

தூத்துக்குடியில் ரூ.32.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை இன்று மாலை 4.50 மணிக்கு திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து நாளை காலை 10 மணிக்கு 6 முதல் 12-ஆம் வகுப்பு அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கிடும் புதுமைப் பெண் விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

Advertisement

பின்னர் தூத்துக்குடியில் இருந்து நாளை மாலை கன்னியாகுமரி செல்லும் முதல்வர், திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் மண்படத்திற்கும் இடையே ரூ.37 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி நடைபாலத்தை திறந்து வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு மதியம் 1 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையம் சென்றடைந்தார்.

சபாநாயகர் அப்பாவு, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், தங்கம் தென்னரசு, டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் ஸ்டாலினை வரவேற்றனர். மேலும், விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த ஸ்டாலின் தொண்டர்களுக்கு கையசைத்தவாறு தனது வாகனத்தில் ஏறி சென்றார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன