Connect with us

இந்தியா

தென் கொரிய விமான விபத்து: பலி 47 ஆக உயர்வு; மீட்பு பணி தீவிரம்

Published

on

plane crash

Loading

தென் கொரிய விமான விபத்து: பலி 47 ஆக உயர்வு; மீட்பு பணி தீவிரம்

தென் கொரியாவில் 181 பேருடன் சென்ற விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி தீப்பிடித்து எரிந்ததில் 47 பேர் உயிரிழந்தனர்.175 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்களுடன் சென்ற அந்த விமானத்தின் தரையிறங்கும் கியர் செயலிழந்ததால் ஓடுபாதையில் இருந்து சறுக்கி வேலியில் மோதி தீப்பிடித்தது.தலைநகர் சியோலில் இருந்து சுமார் 288 கி.மீ தூரத்தில் உள்ள தெற்கு ஜியோலா மாகாணத்தில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் ஜெஜு ஏர் விமானம் (உள்ளூர் நேரப்படி) காலை 9 மணியளவில் தரையிறங்கியபோது இந்த விபத்து நிகழ்ந்தது.ஆங்கிலத்தில் படிக்கவும்:At least 62 dead after plane carrying 181 veers off runway at South Korea airportதாய்லாந்தில் இருந்து ஜெஜு ஏர் விமானம் திரும்பிக் கொண்டிருந்ததாகவும், தரையிறங்கும் போது இந்த விபத்து நடந்ததாகவும் கூறப்படுகிறது. அவசரகால சூழ்நிலையை விமான நிலையம் கையாள்வதாக முவான் விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.அந்த விமானம் போயிங் 737-800 ரக விமானம் என விமான கண்காணிப்பு தளமான பிளைட் ராடார் 24 தெரிவித்துள்ளது.இந்த தீ விபத்தில் 47 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 32 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பல ஹெலிகாப்டர்களை தீயைக் கட்டுப்படுத்த அவசரகால பணியாளர்கள் ஒரு பயணி மற்றும் ஒரு குழு உறுப்பினர் என இரண்டு பேரை மீட்டனர்.உள்ளூர் ஊடகங்கள் பகிர்ந்த புகைப்படங்கள், விமானத்திலிருந்து புகை வெளியேறுவதைக் காட்டின. முவான் விமான நிலையத்தில் மீட்புப் பணி நடந்து கொண்டிருந்தபோது இருவர் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.BREAKING: Video shows crash of Jeju Air Flight 2216 in South Korea. 181 people on board pic.twitter.com/9rQUC0Yxt8தென் கொரியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்ட தென் கொரியாவின் தற்காலிக அதிபர் சோய் சாங்-மோக், மீட்புக்கான அனைத்து முயற்சிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறினார்.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன