Connect with us

இந்தியா

டாப் 10 நியூஸ்: கன்னியாகுமரி கண்ணாடி பாலம் திறப்பு முதல் அதிமுக ஆர்ப்பாட்டம் வரை!

Published

on

Loading

டாப் 10 நியூஸ்: கன்னியாகுமரி கண்ணாடி பாலம் திறப்பு முதல் அதிமுக ஆர்ப்பாட்டம் வரை!

6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவியர்க்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கிடும் புதுமைப் பெண் விரிவாக்க திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (டிசம்பர் 30) தூத்துக்குடியில் தொடங்கி வைக்கிறார்.

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையையும் விவேகானந்தர் பாறையையும் இணைக்கும் வகையில் ரூ.37 கோடியில் கட்டப்பட்டுள்ள கண்ணாடி நடைபாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

Advertisement

ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் இன்று இரவு 9.48 மணிக்கு விண்ணில் பாய்கிறது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னை மாவட்டம் தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் இன்று அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, தேசிய மகளிர் ஆணைய குழு இன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் விசாரணை நடத்த உள்ளனர்.

Advertisement

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா திருநெடுந்தாண்டகத்துடன் இன்று தொடங்குகிறது.

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியாகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு கால பூஜைகள் இன்று மாலை 4 மணிக்கு நடை திறப்புடன் தொடங்குகிறது.

Advertisement

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நியூசிலாந்து பே ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறும் ஐசிசி டி20 இரண்டாவது கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து, இலங்கை அணிகள் மோதுகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன