Connect with us

இலங்கை

திசர நாணயக்காரவுக்கு பணம் வழங்கியவர்கள் தொடர்பில் தகவல் கோரும் பொலிஸார்!

Published

on

Loading

திசர நாணயக்காரவுக்கு பணம் வழங்கியவர்கள் தொடர்பில் தகவல் கோரும் பொலிஸார்!

வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் திசர நாணயக்காரவுக்கு பணம் வழங்கிய வேறு எவரேனும் இருப்பின் அது தொடர்பில் தகவல் வழங்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

குறித்த தகவல்களை வழங்குவதற்காக விசேட தொலைபேசி இலக்கமொன்றையும் அந்தத் திணைக்களம் வழங்கியுள்ளது.

Advertisement

அதன்படி 0112 337 219 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொண்டு குறித்த தகவல்களை வழங்க முடியும்.

மேலும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் திசர நாணயக்காரவை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, 2019ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் வரையான காலப்பகுதியில் அவரின் கணக்கில் 27 கோடி ரூபாய் பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாகக் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

பின்லாந்தில் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாகக்கூறி பண மோசடி செய்த குற்றச்சாட்டிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நபரொருவரிடம் 40 இலட்சம் ரூபாய் பணத்தைக் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.[ஒ]

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன