இலங்கை
அரச அதிகாரிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்: பொலிஸாரிடம் முறைப்பாடு!
அரச அதிகாரிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்: பொலிஸாரிடம் முறைப்பாடு!
நகர அபிவிருத்தி அதிகாரசபையினர் மற்றும் அதிகாரிகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரப்பபடும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் உதவிப் பணிப்பாளரால் பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் உள்ள பொலிஸ் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் இது தொடர்பில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
டிசெம்பர் மாதம் 13ஆம் திகதி யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தைத் தொடர்ந்து இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பேஸ்புக் தளத்தை மையப்படுத்தி வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இவ்வாறானதொரு பின்னணியிலேயே இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ப)
