இலங்கை
சர்ச்சைக்குரிய 3 கேள்விகளுக்கு தீர்வு!

சர்ச்சைக்குரிய 3 கேள்விகளுக்கு தீர்வு!
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் வெளியான 3 கேள்விகளுக்கென அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் புள்ளிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊடக அறிக்கையொன்றின் ஊடாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுதந்தர இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 15ம் திகதி புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெற்றது. பரீட்சைக்கு முன்னரே வினாத்தாளிலுள்ள 3 கேள்விகள் வெளியான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உயர் நீதிமன்றில் மனு தாக்கப்பட்டிருந்தது.
இதற்கான தீர்ப்பும் நேற்று முன்தினம் வெளியானதுடன் இதற்கான தீர்வாக 3 பரிந்துரைகள் நீதிமன்றத்தினால் முன்வைக்கப்பட்டிருந்தன.