இலங்கை
மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன்! குருநாகலில் சம்பவம்

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன்! குருநாகலில் சம்பவம்
குருநாகல், மெல்சிரிபுர – பன்சியகம பகுதியில் மனைவியை கூரிய ஆயுத்ததால் தாக்கி கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில் பன்சியகம 7ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குடும்பத் தகராறு காரணமாக இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறியதாக பொலிஸார் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரான கணவன் குறித்த பகுதியில் இருந்து தலைமறைவாகியுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.