சினிமா
தல fans_ ட மைண்ட் செட்ட உடைச்சிட்டாங்க..!! அஜித் ரசிகரின் வெறித்தனமான பேட்டி

தல fans_ ட மைண்ட் செட்ட உடைச்சிட்டாங்க..!! அஜித் ரசிகரின் வெறித்தனமான பேட்டி
சினிமா துறைக்குள் யாருடைய ஆதரவும் இன்றி தனது கடின உழைப்பினால் போராடி தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் தான் அஜித் குமார். இவரை திரையில் கண்டாலே போதும் என ஏங்கும் ரசிகர்கள் ஏராளம். தனது ரசிகர் மன்றத்தை கலைத்தாலும் அஜித்தின் படத்துக்கு கிடைக்கும் ஓப்பனிங் வேறு எந்த ஹீரோவுடைய படத்திற்கும் கிடைக்காது.அஜித் குமார் நடிப்பில் இறுதியாக துணிவு திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. அந்த சமயத்தில் துணிவு படத்திற்கு போட்டியாக களம் இறங்கிய விஜயின் வாரிசு படத்தை விடவும் துணிவு படம் பாசிட்டிவ் விமர்சனங்களை அள்ளியது.தற்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி திரைப்படம் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார் அஜித்குமார். மேலும் பொங்கல் தினத்தை முன்னிட்டு விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்ட நிலையில், இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில், அஜித்குமாரின் ரசிகர் வழங்கிய பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதன்படி அவர் கூறுகையில், விடாமுயற்சி திரைப்படம் எப்போது வந்தாலும் மாஸ் ஹிட் அடிக்கும் . இதுவரை அஜித் மீது உள்ள வன்மம் எல்லாவற்றையும் தற்போது கொட்டி தீர்க்கின்றார்கள்.அஜித்தின் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தள்ளப்போனது. அது கேம் சேஞ்சர் படத்தின் ரிலீஸை முன்னிட்டு பின்வாங்குவதாக தெரிவிக்கின்றனர். ஆனால் உண்மை அது அல்ல. இது எல்லாமே தல ரசிகர்களின் மைண்ட் செட்டை உடைப்பதற்காகத்தான்.ஆனால் தல இருக்கும் இடமே வேற.. விடாமுயற்சி இன்றைக்கு வரவில்லை என்றாலும் நாளைக்கு வரும்.. அதன் போது கொண்டாடுவோம்.. எங்களுடைய மைண்ட் செட்டை ஒருபோதும் உடைக்க முடியாது. அஜித்தே.. கடவுளே.. என்று கத்திக் கொண்டு இருந்தோம். அவர் எங்களுக்கு கடவுள் தான். ஆனால் அவற்றையெல்லாம் தகர்த்து அவர் என்ன சொன்னார் என்றால், குடும்பத்தை கவனி.. படம் வந்தால் கொண்டாடு.. யாரையும் தட்டி விட்டு முன்னுக்கு வராதே.. என்று அவர் கிளியரா சொல்லிட்டார். அவர் மேல எந்த தப்பும் கிடையாது.. ஆனால் எங்களால் அவரை விட்டுக் கொடுக்கவும் முடியாது என்று தெரிவித்துள்ளார்.