Connect with us

பொழுதுபோக்கு

மருமகளை கொல்ல மாமனார் எடுத்த புது அவதாரம்: கோவில் கலசம் கிடைக்குமா? ஜீ தமிழ் சீரியலில் இன்று!

Published

on

Anna and Ka D

Loading

மருமகளை கொல்ல மாமனார் எடுத்த புது அவதாரம்: கோவில் கலசம் கிடைக்குமா? ஜீ தமிழ் சீரியலில் இன்று!

இசக்கியை கொல்ல உருவாக்கப்பட்ட அரிவாள்.. கோவிலில் நடக்க போகும் விபரீதம் என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் இசக்கி மற்றும் முத்துப்பாண்டி ரூமுக்குள் சந்தோசமாக பேசி கொண்டிருந்த நிலையில் இன்று, இசக்கி எனக்காக நீங்க இங்க வந்திருக்கீங்க என்று எமோஷனலாக பேச முத்துப்பாண்டி நீ எனக்காக வந்தல.. அதே மாதிரி தான் என சொல்கிறான். இதனால் இருவருக்கும் இடையேயான காதல் அதிகமாகிறது.மறுபக்கம் சௌந்தரபாண்டி அரிவாளால் ஒரு மரத்தை வெட்டுகிறான், இசக்கியை கொல்வதற்காகவே உருவாக்கப்பட்ட அருவாள் தான் அது எனவும் தெரிய வருகிறது. இதை தொடர்ந்து அடுத்த நாள் காலையில் சண்முகம் குடும்பத்தினர் கெடா வெட்டி பொங்கல் வைப்பதற்காக குலதெய்வ கோவிலுக்கு வருகின்றனர். சௌந்தரபாண்டி மற்றும் ரவுடி ஒருவன் சமையல்காரன் கெட்டப்பில் கோவிலுக்கு வருகின்றனர்.முத்துப்பாண்டி எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. அதை முடிச்சிட்டு கோவிலுக்கு வந்து விடுவதாக கிளம்பி செல்கிறான். கோவிலில் சமையல்காரன் கெட்டப்பில் இருக்கும் ரவுடி முத்துப்பாண்டி ஐயா அங்க இருக்காரு.. உங்களை பார்க்க வர சொன்னாரு என்று சொல்ல இசக்கி கிளம்பி செல்கிறாள்.  அங்கே சௌந்தரபாண்டி அரிவாளுடன் காத்துக் கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.வெளிநாட்டுக்கு கைமாறும் கலசம்.. கார்த்திக் செய்ய போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் மற்றும் ரேவதி கலசத்தை கண்டுபிடிக்க தண்ணி கேன் போடும் கம்பெனிக்கு வந்திருந்த நிலையில் இன்று, கார்த்திக் அந்த வண்டி குறித்து விசாரிக்க என் ப்ரண்ட் எடுத்துட்டு போய் இருந்தான் என்று சொல்ல, அந்த நபருக்கும் ரவுடிகளுக்கு சம்மந்தம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்கிறான். இதை தொடர்ந்து அந்த ரவுடிகளை தேடி வருகிறான். மறுபக்கம் சேட்டு வீட்டிற்குள் புகுந்த நாகம் ஒன்று குழந்தையை சீண்டி விட சேட்டுவின் மனைவி குழந்தையை காப்பாற்ற என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறாள். இங்கே கார்த்திக் ரவுடிகளை கண்டுபிடித்து அவர்களை அடித்து விசாரிக்க கலசத்தை விற்று விட்டதாக சொல்கிறார்கள்.இதையடுத்து கார்த்திக் மற்றும் ரேவதி இந்த பக்கமாக வர குழந்தையை ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்கின்றனர், சேட்டுவின் மனைவி போன் போட்டு அந்த கலசத்தால் தான் எல்லா பிரச்னையும் என பேச கார்த்திக் கலசம் என்ற வார்த்தையை கேட்டு விட்டு அந்த பெண்ணை விசாரிக்கிறான். சேட்டுவின் மனைவி நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்ல அந்த கலசத்தை தேடி தான் நாங்க வந்தோம் என கார்த்திக் சொல்கிறான்.அந்த பெண்மணி சேட்டுவை சந்தித்து கலசத்தை வாங்கிக்கோங்க என்று சொல்கிறாள். ஆனால் சேட்டு ஒரு குடோனில் வெளிநாட்டு நபர்களை சந்தித்து கலசத்தை கொடுத்து பணத்தை வாங்கி கொண்டு கிளம்புகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன