இலங்கை
யாழ்ப்பாணத்தில் இரவுவேளை அதிரடியில் இறங்கிய NPP கட்சி எம்.பி!

யாழ்ப்பாணத்தில் இரவுவேளை அதிரடியில் இறங்கிய NPP கட்சி எம்.பி!
யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை சீமெந்து உற்பத்தி தொழிற்சாலைக்கு சட்டவிரோதமான முறையில் கண்டற் கற்களை ஏற்றிச் சென்ற பாரவூர்தியை வழிமறித்து தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அண்மைய நாட்களில் மந்துவில் பிரதேசத்தில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல கட்டடப் பொருள் விற்பனை செய்யும் வர்த்தகருக்கு சொந்தமான பாரவூர்தியில் சட்டவிரோதமான முறையில் கண்டற் கற்களை அகழ்ந்து செல்லப்படுவதாக பிரதேச மக்களால் தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்.
இளங்குமரனுக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டது.
மக்களின் முறைப்பாட்டையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போது, நேற்று இரவு 10.15 மணியளவில் நுணாவில் பகுதியில் வைத்து குறித்த வர்த்தகருக்கு சொந்தமான பாரவூர்தியை மறித்து சோதனையிட்டப்பட்டது.
இதன் போது அனுமதிப்பத்திரம் இன்றி கற்கள் ஏற்றிச் சென்றமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட குறித்த பாரவூர்தியை சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்தார்.