Connect with us

இலங்கை

கிளிநொச்சியில் சைவக் குருக்களை தாக்கிய கிறிஸ்தவக் கும்பல்!

Published

on

Loading

கிளிநொச்சியில் சைவக் குருக்களை தாக்கிய கிறிஸ்தவக் கும்பல்!

கிளிநொச்சி கனகாம்பிகை குளம் பகுதியைச் சேர்ந்த சிவ ஸ்ரீ சிவகுமாரன் குருக்கள் மீது அங்கிருந்த ஒருவர் கடுமையாக தாக்கியதில், படுகாயமடைந்த குருக்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 கிளிநொச்சி கனகாம்பிகை குளம் கிராம அலுவலர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (07) பகல் 11 மணியளவில் மீளாய்வு நடவடிக்கை நடைபெற்றுக் கொண்டிருந்த
சமயம் மீளாய்வு செய்வதற்கு சென்ற போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Advertisement

 குறித்த குருக்கள் அணிந்திருந்த உருத்திராக்க மாலை மற்றும் தங்கச் சங்கிலி என்பனவும் அறுத்து வீசப்பட்டுள்ளன.

 இது தொடர்பில் சிவ சேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 கிளிநொச்சி, கனகாம்பிகைக் குளம், 35 வயதான கிறிஸ்தோத்தரம் அகிலநாதன்,

Advertisement

அதே கனகாம்பிகைக் குளத்தைச் சேர்ந்த சைவக் குருக்கள் 40 வயதான சிவஸ்ரீ சிவகுமாரன் குருக்களைத் தன் தலைக்காப்பு மூடியால் தாக்கினார்.

குருக்களின் உருத்திராக்க மாலைகளை அறுத்தார். தங்கச் சங்கிலியை அறுத்தார். புனித அணிகளையும் அடாத்தாக இழுத்துப் பறித்தார். 

images/content-image/2024/1736312990.jpg

 கையிலும் தலையிலும் காயம் ஏற்படுத்தினார்.

Advertisement

காயம் அடைந்த சைவக் குருக்கள் கிளிநொச்சி மருத்துவமனையில் நாலாவது மருத்துவ மண்டலத்தில் கடும் காயங்களுடன் மருத்துவம் பெற்று வருகிறார்.

கனகாம்பிகைக் குளத்தில் அமைதியாக வாழ்ந்த, மத நல்லிணக்கத்துடன் வாழ்ந்த சைவ கிறித்துவ மக்களிடையே தேவையற்ற மோதலையும் எதிர்ப்புணர்வையும் அகிலநாதன் உருவாக்கியுள்ளார்.

ICCPR Act Section 3.1 விதிக்கமைய அகிலநாதன் கனகாம்பிகை குளத்தில் மதவெறுப்பை தூண்டி உள்ளார் வன்முறையைக் கையில் எடுத்துள்ளார். 

Advertisement

சட்டத்தை மீறியுள்ளார்.

அப்பாவியான எதிர்க்கத் தெரியாத சைவ நெறிகளை பின்பற்றுவதால் திருப்பித் தாக்கத் தெரியாத சைவக் குருக்களைத் தலைக்காப்பு மூடியால் அடித்துத் துன்புறுத்திப் புனித சின்னங்களையும் சங்கிலிகளைகளையும் அறுத்துக் காயங்களை கடுமையாக்கி மருத்துவமனையில் சேருமளவுக்குக் வன்முறையை பயன்படுத்தியதால் உடனடியாக ICCPR Section 3 இரண்டாவது மூன்றாவது நாலாவது விதிகளுக்கு அமையத் தளையிட்டுப் பிணையில் வெளிவரவும் முடியாதவாறு நீதிமன்றத்தில் முன்னிலப் படுத்துமாறு காவல்துறையை கேட்டுக்கொள்கிறேன்.

 இந்த நிகழ்ச்சியின் விளைவாகக் கனகாம்பிகைக் குளம் சார் பகுதியில் கலவரச் சூழ்நிலை ஏற்படுகின்ற நிலையில் காவல்துறை போதுமான பாதுகாப்பு அளித்து சைவ சமய மக்களைக் காத்தருளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Advertisement

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன