Connect with us

சினிமா

நயன்தாரா – தனுஷ் ஆவணப்பட வழக்கு! இனி கால அவகாசம் இல்லை! இறுதி விசாரணை ஒத்திவைப்பு

Published

on

Loading

நயன்தாரா – தனுஷ் ஆவணப்பட வழக்கு! இனி கால அவகாசம் இல்லை! இறுதி விசாரணை ஒத்திவைப்பு

பிரபல நடிகை நயன்தாரா சினிமா துறையில் லேடி சூப்பர் ஸ்டாராக பல படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் தனது திருமண ஆவண படத்தில் நானும்ரவுடி  தான் படத்தின் பாடல் வரிகள், காட்சிகளை பயன்படுத்த அனுமதி பல முறை கேட்டும்நடிகர்தனுஷ் கொடுக்கவில்லை எனகுற்றம் சாட்டி இருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.நடிகை நயன்தாராவின் டாக்குமெண்ட்ரி அவரது பிறந்தநாளன்று நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இதில் தனுஷ் தயாரிப்பில் நயன்தாரா நடித்த ‘நானும் ரெளடிதான்’ படத்தின் பிடிஎஸ் காட்சிகளை தன் அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக ரூ. 10 கோடி நஷ்ட ஈடு கேட்டும் காட்சிகளை ஆவணப்படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் தனுஷின் வொண்டர்பார் தயாரிப்பு நிறுவனம் நயன்தாரா மீதும் நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கு இன்று விசாரணைகு வந்த நிலையில் நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்னிலையில் விசாரிக்கப்பட்டது. அப்போது நெட்ஃபிலிக்ஸ் தரப்பு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி வருகிற ஜனவரி 22 ஆம் தேதி இறுதி விசாரணை என்றும், இனி கால அவகாசம் கேட்கக் கூடாது என்றும் தெரிவித்து தீர்ப்பை ஒத்திவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன