இலங்கை
கோப் குழுவிற்கு புதிய தலைவர் நியமனம்!

கோப் குழுவிற்கு புதிய தலைவர் நியமனம்!
தேசிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி நிஷாந்த சமரவீர பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் (COPE) தலைவராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பொது நிறுவனங்கள் தொடர்பான குழு இன்றையதினம் (09-01-2025) பிற்பகல் 2.00 மணிக்கு நாடாளுமன்றத்தில் கூடிய போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.