Connect with us

இலங்கை

செவ்வாய் பகவான் தரப்போகும் பிரச்சனையால் வாழ்வில் பல சிக்கல்களை சந்திக்கும் ராசிகள்

Published

on

Loading

செவ்வாய் பகவான் தரப்போகும் பிரச்சனையால் வாழ்வில் பல சிக்கல்களை சந்திக்கும் ராசிகள்

செவ்வாய் பகவான் தற்போது கடக ராசியில் வக்ர நிலையில் சஞ்சாரம் செய்து வருகின்றார். இவர் ஜனவரி 21ம் திகதி பின்னோக்கி நகர்ந்து மிதுன ராசியில் நுழைய உள்ளார். மிதுன ராசியில் செவ்வாய் சஞ்சரிக்கும் காலத்தில் எந்தெந்த ராசிகளுக்கு பல பிரச்சினைகள் ஏற்படும் என நாம் இங்கு பார்ப்போம்.

செவ்வாய் பகவான் வக்ர நிலையில் மிதுன ராசியில் நுழைய உள்ளார். இதனால் எந்த செயலிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. நீங்கள் செய்யக்கூடிய தொழில், வியாபாரத்தில் உங்களின் அணுகுமுறையில் கவனம் தேவை. தனிப்பட்ட வாழ்க்கையில் சில தொந்தரவுகள் சந்திக்க வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும். விட்டுக் கொடுத்து செல்வதும், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில் கவனம் தேவை. சிலருக்கு தோல் பிரச்னைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. உணவு விஷயத்தில் கவனம் தேவை. எண்ணெய் உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். உடற்பயிற்சி அவசியம்.

Advertisement

தொழில் வாழ்க்கையில் கடினமான சூழல் நிலவும். உங்கள் வேலையில் வெற்றி பெற்றிட கடினமாக உழைக்க வேண்டிய காலம். நிதி நிலையில் நிதானம் தேவை. செலவுகளைக் கட்டுப்படுத்தாவிட்டால் சிரமங்கள் சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல்படவும். துணையிடமிருந்து எதிர்பார்த்த ஆதரவு கிடைப்பது கடினமே. ஆரோக்கியம் சற்று பலவீனமாக இருக்கும். சிலருக்கு செரிமானம் தொடர்பான பிர்ச்னைகள் சந்திக்க வாய்ப்புள்ளது.

விருச்சிக ராசி அதிபதியான செவ்வாய் பகவான், மிதுனத்தில் பகை பெறு வக்ர நிலையில் சஞ்சரிப்பதால், நீங்கள் பல விதத்தில் தடைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. உங்களின் முயற்சிகளில் பல தடைகளை தாண்டி தான் வெற்றி பெற முடியும். தேவையற்ற பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. உங்களின் உடல் நலம் மற்றும் இலக்குகளை அடைவதில் கவனம் தேவை. சிலருக்கு மன அழுத்தம், தோள்பட்டை வலி போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.

தனுசு ராசிக்கு செவ்வாய் பகவான் மிதுனத்தில் சஞ்சரிக்கும் காலத்தில், உங்களுக்கு தேவையற்ற பதற்றம் சந்திக்க நேரிடும். உங்களின் பெற்றோர், குழந்தைகள் குறித்து கவலை அதிகரிக்கும். தொழில் ரீதியாக உங்களின் பணியாளர்களுடன் தேவையற்ற சிக்கல் சந்திக்க வாய்ப்புள்ளது. உத்தியோகஸ்தர்கள், தங்களின் வேலையில் திருப்தி இல்லாத சூழல் இருக்கும். வணிகத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் போகும். அதிர்ஷ்டம் குறையும். பண லாபம் இருந்தாலும், செலவுகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கையில், துணையுடன் மன வருத்தம், சிக்கல்களை சந்திக்க நேரிடும். துணைக்கு உங்கள் மீதான நல்லெண்ணம் குறையும். ஆரோக்கியத்தைப் பராமரிக்க அதிக செலவாகும்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன