Connect with us

பொழுதுபோக்கு

“விரைவில் படப்பிடிப்புகளுக்கு திரும்புவேன் என நம்புகிறேன்”: ராஷ்மிகா மந்தனா

Published

on

Rashmika

Loading

“விரைவில் படப்பிடிப்புகளுக்கு திரும்புவேன் என நம்புகிறேன்”: ராஷ்மிகா மந்தனா

ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு காலில் காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனால், அவரது படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டன. ஆங்கிலத்தில் படிக்கவும்: Rashmika Mandanna shares health update after leg injury: ‘I’ll be hopping my way back to sets for Thama, Sikandar, and Kubera’ அவர் வெளியிட்டுள்ள பதிவில் “ஜிம்மில் பயிற்சி மேற்கொண்ட போது காயம் ஏற்பட்டது. விரைவில் குணமடைந்து சிக்கந்தர், குபேரா உள்ளிட்ட படப்பிடிப்புகளில் கலந்து கொள்வேன் என நம்புகிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.குறிப்பாக, “தாமதத்திற்கு என் இயக்குநர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். கால் விரைவில் குணமாகி அனைத்து படப்பிடிப்புகளிலும் கலந்து கொள்வேன் என்று நம்புகிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டுருந்தார்.இந்தப் பதிவில் அவர் விரைவாக குணமடைய வேண்டும் என ராஷ்மிகாவின் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். A post shared by Rashmika Mandanna (@rashmika_mandanna) காயம் ஏற்படுவதற்கு முன்பாக, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடித்து வரும் ‘சிக்கந்தர்’ என்ற திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்து வந்தார். இந்த படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதேபோல், ஆயுஷ்மான் குரானாவுடன் ‘தாமா’, விக்கி கௌஷலுடன் ‘சாவா’ மற்றும் தனுஷ், நாகார்ஜுனாவுடன் இணைந்து ‘குபேரா’ ஆகிய படங்களிலும் ராஷ்மிகா நடித்து வந்தார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன