Connect with us

இலங்கை

வடக்கு கிழக்கில் மிக மோசமான காலநிலை: விவசாயிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Published

on

Loading

வடக்கு கிழக்கில் மிக மோசமான காலநிலை: விவசாயிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் கடந்த 07 ஆம் திகதி அன்று உருவாகிய காற்றுச் சுழற்சி தற்போது மாத்தறைக்கு தென் மேற்கு திசையில் 380 கி.மீ. தூரத்தில் காணப்படுகின்றது. இதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் வேறுபட்ட அளவுகளிலான மழை தொடரும் என யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

 இதுதொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்

Advertisement

நாளை 15 ஆம் திகதி காலை மழை சற்று குறைவாக காணப்படும். ஆனால் மதியத்துக்கு பின்னர் வடக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமான மழை கிடைக்கும். ஆனால் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கன மழை கிடைக்கும்.

16 ஆம் திகதி வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு சிறிய அளவில் மழை கிடைக்கும். ஆனால் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் மிதமான மழை கிடைக்கும். 

 17 ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஒரு சில பகுதிகளுக்கு மட்டும் மிகச் சிறிய அளவில் மழை கிடைக்கும்.

Advertisement

16/17 ஆம் திகதிகளில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அறுவடை செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும். 

ஆனாலும் சிறிய அளவிலேனும் மழை கிடைக்கும் என்பதனை கருத்தில் கொள்ளவும்

17 ஆம் திகதி அன்று தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. இதனால்

Advertisement

18 ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிகக் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

19 ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கன மழை கிடைக்கும்

20 ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமான மழை கிடைக்கும். 

Advertisement

 21 ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமான மழை கிடைக்கும்.

அன்புக்குரிய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் விவசாயிகளே… நீங்கள் அறுவடையைத் திட்டமிட வேண்டும் என்பதற்காகவே மழை தொடர்பான எதிர்வுகூறலை விரிவாக தந்துள்ளேன்.

ஆனாலும் உங்கள் நிலைமைக்காக மனம் வருந்துகின்றேன். 

Advertisement

நீங்கள் விதைத்த பொழுது பெங்கால் புயல் பாதிப்பை ஏற்படுத்தியது. அதில் எஞ்சியவற்றை அறுவடை செய்யவிடாமல் தற்போது மழை கிடைத்து வருகின்றது.

தற்போது இரணைமடுக்குளத்தின் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. கல்மடுக்குளம் வான் பாய்கின்றது. வவுனிக்குளம் இன்று இரவு அல்லது நாளை காலை வான் பாயும்.

 தண்ணி முறிப்பு மற்றும் முத்தையன் கட்டு குளங்களின் வான் கதவுகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

நன்கு முற்றிய நெற்கதிர்கள் உள்ள வயலுக்கு மிதமான மழை கிடைத்தாலே மிகப் பெரிய பாதிப்புக்கள் ஏற்படும்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன