இலங்கை
நடுவானில் திடீரென ஏற்பட்ட அசம்பாவிதம்… அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

நடுவானில் திடீரென ஏற்பட்ட அசம்பாவிதம்… அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!
சென்னையில் இருந்து அசாமுக்குப் பயணித்த விமானத்தில் திடீரென ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் இன்றையதினம் (17-01-2025) இடம்பெற்றதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த விமானத்தில் 162 பேர் பயணித்துள்ள நிலையில் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்ட நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.