இலங்கை
புதிய சாதனை அளவை எட்டிய கொழும்பு பங்கு சந்தை : இன்றைய நிலவரம்!

புதிய சாதனை அளவை எட்டிய கொழும்பு பங்கு சந்தை : இன்றைய நிலவரம்!
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைக் குறியீடும் (ASPI) இன்று 197.19 புள்ளிகளால் அதிகரித்துள்ளது.
அதன்படி, நாள் வர்த்தக முடிவில், அனைத்து பங்கு விலைக் குறியீடும் 17,025.99 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.
கொழும்பு பங்குச் சந்தையின் வரலாற்றில் அனைத்துப் பங்கு விலைக் குறியீடும் 17,000 புள்ளிகளை எட்டிய முதல் சந்தர்ப்பமாகவும் இது பதிவாகியுள்ளது. இன்று பதிவான வருவாய் ரூ. 9.78 பில்லியனாகும்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்