Connect with us

இலங்கை

பொய்யான மருத்துவ அறிக்கை; விசேட மயக்க மருந்து நிபுணருக்கு விளக்கமறியல்

Published

on

Loading

பொய்யான மருத்துவ அறிக்கை; விசேட மயக்க மருந்து நிபுணருக்கு விளக்கமறியல்

  தவறான மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததாகக் கூறப்படும் விசேட மயக்க மருந்து நிபுணரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டது.

குற்றம் சாட்டப்பட்ட மருத்துவரின் உடல்நிலை குறித்து ஐந்து பேர் கொண்ட மருத்துவக் குழு சமர்ப்பித்த அறிக்கையை பரிசீலித்த பின்னர், கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

Advertisement

வரி இல்லாத உரிமங்களைப் பயன்படுத்தி வெளிநாட்டிலிருந்து வாகனங்களை இறக்குமதி செய்வதாகக் கூறி மருத்துவர்களிடமிருந்து பணம் பெற்று குற்றவியல் மோசடி செய்ததாக சட்டமா அதிபர் குறித்த மருத்துவர் மீது வழக்குத் தொடர்ந்திருந்தார்.

மேற்படி வழக்கு நேற்று (22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதி மருத்துவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

தனது உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகக் கூறி நீதிமன்றத்தில் மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.

Advertisement

இருப்பினும், உயர் நீதிமன்ற நீதிபதி அந்த மருத்துவ அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தீர்ப்பளித்ததோடு, பிரதிவாதியை பரிசோதித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதிமன்ற மருத்துவ அதிகாரி உட்பட ஐந்து பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் குழுவுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

அதற்கமைய நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த மருத்துவக் குழு, பிரதிவாதி நீதிமன்றத்தில் முன்னிலயாகாமல் இருப்பதற்கான எந்தவொரு நோயாலும் பாதிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, பிரதிவாதி தவறான மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்து நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயன்றதை சுட்டிக்காட்டிய பின்னர் நீதிபதி மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன