இலங்கை
வெள்ளத்தில் மூழ்கிய அருள்மிகு பத்தினி அம்மன் ஆலயம்

வெள்ளத்தில் மூழ்கிய அருள்மிகு பத்தினி அம்மன் ஆலயம்
வரலாற்றுச் சிறப்பு மிக்க திருகோணமலை – பாலம்போட்டாறு அருள்மிகு பத்தினி அம்மன் ஆலயம் வெள்ளத்தில் மூழ்கி காணப்படுகின்றது.
கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பத்தினி அம்மன் ஆலயம் வெள்ளத்தில் மூழ்கி காணப்படுகின்றது.
அதேவேளை நாட்டில் சீரற்ற காலநிலையில் பல பிரதேசங்களும் பாதிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும், ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.