இலங்கை
கொழும்பில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட மூவர் கைது

கொழும்பில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட மூவர் கைது
கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் மூவர் படகுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகத்துக்குரிய வகையில் துறைமுகத்தை அண்டிய பகுதியில் குறித்த படகு பயணிப்பதை கவனித்த கடற்படையினர் அதனை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இதன்போது பல சட்டவிரோத கடற்றொழில் உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன. தெஹிவளை பகுதியைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைதாகியுள்ளனர்.