Connect with us

விளையாட்டு

IND vs ENG LIVE Score, 3rd T20I: தொடரை கைப்பற்றுமா இந்தியா? இங்கிலாந்துடன் இன்று மோதல்

Published

on

India vs England 3rd T20I LIVE Cricket Score updates Rajkot in tamil

Loading

IND vs ENG LIVE Score, 3rd T20I: தொடரை கைப்பற்றுமா இந்தியா? இங்கிலாந்துடன் இன்று மோதல்

இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக  வருகை தந்துள்ள ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் கொல்கத்தாவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs England LIVE Cricket Score, 3rd T20Iஇதனைத் தொடர்ந்து, சென்னையில் அரங்கேறிய 2-வது டி20 ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில்,  இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கி நடக்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடலாம் என்ற முனைப்பில் இந்திய அணி களமிறங்ககும். அதே சமயம், தொடரை இழக்க கூடாது என்பதில் இங்கிலாந்து கவமான இருக்கும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் வீரர்கள்: சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ரவி பிஷ்னோய்/முகமது ஷமி/ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி.இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன்: ஜோஸ் பட்லர் (கேப்டன்), பென் டக்கெட், பில் சால்ட், ஹாரி புரூக், லிவிங்ஸ்டன், ஜேமி சுமித், ஜேமி ஓவர்டான், பிரைடன் கார்ஸ், ஆர்ச்சட், அடில் ரஷித் மற்றும் மார்க் வுட். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன