Connect with us

இந்தியா

வக்ஃப் குழு வரைவு அறிக்கை ஏற்பு; எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மாலை 4 மணிக்குள் எதிர்ப்புக் கருத்துகளை சமர்ப்பிக்கலாம்

Published

on

oppmps

Loading

வக்ஃப் குழு வரைவு அறிக்கை ஏற்பு; எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மாலை 4 மணிக்குள் எதிர்ப்புக் கருத்துகளை சமர்ப்பிக்கலாம்

வக்ஃப் (திருத்த) மசோதாவுக்கான நாடாளுமன்ற கூட்டுக் குழு புதன்கிழமை காலை வாக்கெடுப்பு மூலம் அதன் வரைவு அறிக்கையை ஏற்றுக்கொண்டது. இந்த அறிக்கை மீதான தங்கள் எதிர்ப்புக் குறிப்புகளை சமர்ப்பிக்க எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு புதன்கிழமை மாலை 4 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.ஆங்கிலத்தில் படிக்க: Waqf panel adopts draft report; Opposition MPs asked to submit dissent notes by 4 pmபுதன்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் இறுதிக் கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதாகவும், ஆதரவாக 14 வாக்குகளும் எதிராக 11 வாக்குகளும் பதிவாகியதாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.31 பேர் கொண்ட குழுவின் ஒரு பகுதியாக இருக்கும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள், 655 பக்க வரைவு அறிக்கையை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு மறுபரிசீலனை செய்ய தங்களுக்கு வழங்கப்பட்ட குறுகிய அறிவிப்பை செவ்வாய்க்கிழமை விமர்சித்தனர். செவ்வாய்க்கிழமை மாலை வரைவு தங்களுக்கு அனுப்பப்பட்டதாகவும், புதன்கிழமை காலை 10 மணிக்குள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்குமாறும் தலைவர்கள் கூறினர்.இந்தக் குழுவில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலிருந்தும் 31 உறுப்பினர்கள் உள்ளனர் – என்.டி.ஏ-விலிருந்து 16 பேர் (பா.ஜ.க-விலிருந்து 12 பேர்), எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 13 பேர், ஒய்.எஸ்.ஆர்.சி.பி-யிலிருந்து ஒருவர், மற்றும் ஒரு பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர் ஆகியோர் அடங்குவர்.பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் முன்மொழியப்பட்ட 14 திருத்தங்களை குழு திங்கள்கிழமை அங்கீகரித்தது. மேலும், எதிர்க்கட்சிகள் பரிந்துரைத்த 44 திருத்தங்களை நிராகரித்தது. எதிர்க்கட்சிகள் முன்மொழியப்பட்ட 44 திருத்தங்களும் 2013-ம் ஆண்டு வக்ஃப் சட்டத்தில் திட்டமிடப்பட்ட மாற்றங்களுக்கு எதிரானவை என்று அறியப்படுகிறது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இந்த நடவடிக்கைகளை ஒரு “கேலிக்கூத்து” என்று கூறி, திங்கட்கிழமை கூட்டத்தின் போது நடைமுறை பின்பற்றப்படவில்லை என்று குற்றம் சாட்டினர்.ஏற்றுக்கொள்ளப்பட்ட திருத்தங்களில் வக்ஃப் சொத்துக்களை ஒரு போர்ட்டலில் பதிவு செய்வதற்கான ஆறு மாத கால அவகாசத்தை தளர்த்துவது. ஒரு சொத்து வக்ஃப் சொத்தா அல்லது அரசு நிலமா என்பதை தீர்மானிக்க மாவட்ட ஆட்சியரை மாநில அரசு அதிகாரியாக நியமிப்பது, வக்ஃப் தீர்ப்பாயத்தில் “முஸ்லீம் சட்டம் மற்றும் நீதித்துறை அறிவு” கொண்ட ஒரு உறுப்பினர் இருப்பது ஆகியவை அடங்கும்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன