விளையாட்டு
நிரம்பி வழிந்த ஸ்டாண்டுகள்… கோலியைப் பார்க்க முந்தியடித்த ரசிகர்கள்: டெல்லியில் ஆச்சரியம்!
நிரம்பி வழிந்த ஸ்டாண்டுகள்… கோலியைப் பார்க்க முந்தியடித்த ரசிகர்கள்: டெல்லியில் ஆச்சரியம்!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டிகள் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நாடடைபெற்று வருகிறது. இத்தொடரில் கடைசி சுற்று லீக் ஆட்டங்கள் இன்று வியாழக்கிழமை முதல் தொடங்கி நடக்ககிறது. இந்நிலையில், காலை 9:30 மணிக்கு தலைநகர் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்கி நடக்கும் ஆட்டத்தில் டெல்லி – ரயில்வே அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் கேப்டன் ஆயுஷ் பதோனி தலைமையிலான டெல்லி அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ரயில்வே அணி 67.4 அனைத்து விக்கெட்டையும் இழந்து 241 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக உபேந்திர யாதவ் 95 ரன்களும், கரண் சர்மா 50 ரன்களும் எடுத்தனர். டெல்லி அணி தரப்பில் அதிகபட்சமாக நவ்தீப் சைனி 3 விக்கெட்டை வீழ்த்தினார். தற்போது, டெல்லி அணி தனது முதல் இன்னிங்சில் ஆடி வருகிறது. ஆங்கிலத்தில் படிக்கவும்: Virat Kohli frenzy in Delhi: 15,000 fans land at Kotla for Ranji Trophy tie; pitch invader, ‘RCB, Kohli’ chants, add to the maniaஇந்நிலையில், டெல்லி அணிக்காக நட்சத்திர வீரர் விராட்கோலி 12 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கி விளையாடி வருகிறார் .இந்த நிலையில், விராட் கோலியை காண ரசிகர்கள் மைதானத்தில் குவிந்துள்ளனர் . சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் போட்டியை காண வருகை தந்துள்ளனர்.இது தொடர்பாக டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் (டி.டி.சி.ஏ) செயலாளர் அசோக் குமார் சர்மா பேசுகையில், “நான் 30 ஆண்டுகளுக்கும் மேலாக டெல்லி கிரிக்கெட்டில் ஈடுபட்டுள்ளேன், ஆனால் ரஞ்சி டிராபி போட்டியில் இதுபோன்ற காட்சிகளை நான் பார்த்ததில்லை. இது கோஹ்லியின் புகழ் ஈடிணையற்றது என்பதை காட்டுகிறது” என்று அவர் கூறினார். விராட் கோலி கடைசியாக 2012 ஆம் ஆண்டு உத்திரபிரதேசத்துக்கு எதிராக ரஞ்சி போட்டியில் விளையாடி இருந்தார். அதன் பிறகு தற்போதுதான் களமிறங்கி இருக்கிறார். அவர் டெல்லி அணிக்காக ஆடி வருவது அணியின் பலத்தை அதிகரித்து இருப்பதுடன் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.இதனிடையே, கோலி ஆடும் போட்டியை நேரில் பார்க்க அனுமதி இலவசம் என்றும், போட்டியை பார்க்க வரும் ரசிகர்கள் ஆதார் அட்டை ஜெராக்ஸ் எடுத்து வந்தால் போதுமானது என்று டி.டி.சி.ஏ சங்கம் அறிவித்தது. இதேபோல், முதலில் கோலி ஆடும் போட்டியை நேரலையில் ஒளிபரப்ப திட்டமிடப்படாத ஜியோ சினிமா ஒளிபரப்பாளர்கள், இப்போது நேரடி ஒளிபரப்பு செய்து வருகின்றனர்.CROWD IS INCREASING IN EACH HOUR TO SEE KOHLI 🐐 pic.twitter.com/QOLddxMjlAVIRAT KOHLI – THE ENTERTAINER 🔥Kohli & crowd having lots of fun during Ranji Trophy. pic.twitter.com/D4V3H8GRDJ
