வணிகம்
ரெப்போ விகிதத்தின் அடிப்படை புள்ளிகள் குறைப்பு: எஃப்.டி-களுக்கு அதிக வட்டி வழங்கும் டாப் வங்கிகளின் பட்டியல்

ரெப்போ விகிதத்தின் அடிப்படை புள்ளிகள் குறைப்பு: எஃப்.டி-களுக்கு அதிக வட்டி வழங்கும் டாப் வங்கிகளின் பட்டியல்
ரிசர்வ் வங்கி, ரெப்போ விகிதத்தை 6.25% ஆக குறைத்துள்ளது. வணிக வங்கிகளுக்கு, மத்திய வங்கி கடன் வழங்கும் வட்டி விகிதம் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன. இது பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, வங்கிகளின் கடன் வட்டி விகிதங்களைக் குறைக்கத் தூண்டும். அதே சமயம் வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதத்தையும் இவை குறைக்கலாம். இது, அதிக வட்டி பெறும் மூத்த குடிமக்கள் உள்ளிட்ட பலரை பாதிக்கும்.ரிசர்வ் வங்கியால் நிர்ணயிக்கப்பட்ட ரெப்போ விகிதம், வங்கிகளுக்கான கடன் செலவுகளை பாதிக்கிறது. அதிக ரெப்போ விகிதம் வைப்பு நிதிகளின் வட்டி விகிதங்களை உயர்த்துகிறது. அதே சமயம் குறைந்த விகிதம் கடன் வாங்குவதை மலிவாக ஆக்குவதன் மூலம் வைப்பு நிதிகளின் வருமானத்தை குறைக்கிறது.கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதம், கோவிட் தொற்றால் ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்க பொருளாதாரத்திற்கு உதவும் வகையில், ரிசர்வ் வங்கி கடைசியாக ரெப்போ விகிதத்தை 40 அடிப்படை புள்ளிகளால் 4% ஆகக் குறைத்தது. அதன் பிறகு, ரெப்போ விகிதம் டிசம்பர் 2022 வரை சீராக அதிகரித்தது. ஏழு தொடர்ச்சியான உயர்வுகள் அதை 6.5% ஆகக் கொண்டு வந்தன. ரிசர்வ் வங்கி பிப்ரவரி 2023 முதல் தற்போதைய நிலையைப் பேணுகிறது.ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகித குறைப்பு வைப்பு நிதிகளில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?சமீபத்திய வட்டி விகிதக் குறைப்புடன், குறைக்கப்பட்ட கடன் விகிதங்களுக்கு பதில் வைப்பு நிதிகளின் வட்டி விகிதங்களை வங்கிகள் குறைக்கத் தொடங்கலாம். இது அதிக வட்டி பெறும் மூத்த குடிமக்களின் வைப்பு நிதியின் வட்டி விகிதங்களை பாதிக்கக் கூடும். இந்த தாக்கம் உடனடியாக இருக்காது என்றாலும், இதன் விகிதங்கள் படிப்படியாக இருக்கலாம்.பணக் கொள்கையில் ஆர்.பி.ஐ, வட்டி விகிதக் குறைப்பைச் செயல்படுத்தும் என்று கணிப்புகள் இருந்தபோதிலும், பல வங்கிகள் சமீபத்தில் சில திட்டங்களில் வைப்பு நிதி விகிதங்களை உயர்த்தியுள்ளன. கடந்த மாதத்தில், யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி), ஆக்சிஸ் வங்கி, ஷிவாலிக் சிறு நிதி வங்கி, கர்நாடகா வங்கி மற்றும் ஃபெடரல் வங்கி போன்றவை ஏற்கனவே தங்கள் வைப்பு நிதியின் விகிதங்களை மாற்றியமைத்து வாடிக்கையாளர்களை ஈர்த்தன.பஞ்சாப் நேஷனல் வங்கிபஞ்சாப் நேஷனல் வங்கியில் 303 நாட்கள் (7% வட்டி) மற்றும் 506 நாட்கள் (6.7% வட்டி) என புதிய வைப்பு நிதி திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வந்தது. சாதாரண குடிமக்களுக்கு, வைப்பு நிதி விகிதங்கள் 3.50% முதல் 7.25% வரை இருக்கும். 400 நாட்கள் வைப்பு நிதி காலத்தில் 7.25% என்ற அதிகபட்ச விகிதம் வழங்கப்படுகிறது.ஷிவாலிக் சிறு நிதி வங்கி (SFB)ஷிவாலிக் சிறு நிதி வங்கி தனது வைப்பு நிதி விகிதங்களை, ஜனவரி 22 அன்று புதுப்பித்தது. அதன்படி, சாதாரண குடிமக்களுக்கு 3.50% மற்றும் 8.80% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 4% முதல் 9.30% வரையிலான வட்டியும் வழங்கப்படுகிறது.கர்நாடகா வங்கிஜனவரி 2 முதல், கர்நாடகா வங்கி தனது வைப்பு நிதி விகிதங்களை சாதாரண குடிமக்களுக்கு 3.50% முதல் 7.50% வரை மாற்றியமைத்துள்ளது. 375 நாள் வைப்பு நிதி காலத்தில் 7.50% அதிகபட்ச விகிதம் கிடைக்கிறது.யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாஜனவரி 1 முதல் யூனியன் வங்கி அதன் வைப்பு நிதி விகிதங்களை மாற்றி, 3.50% மற்றும் 7.30% வட்டியை வழங்குகிறது. அதிகபட்சமான 7.30% விகிதம் 456 நாள் வைப்பு நிதி காலத்திற்குப் பொருந்தும்.ஆக்சிஸ் வங்கிஜனவரி 27 முதல், ஆக்சிஸ் வங்கியின் வைப்பு நிதி விகிதங்கள் 3% முதல் 7.25% வரை மாற்றப்பட்டது. ஃபெடரல் வங்கிஃபெடரல் வங்கி, தனது வைப்பு நிதி விகிதங்களை ஜனவரி 10 அன்று மாற்றியமைத்தது. சாதாரண குடிமக்களுக்கு 3% முதல் 7.50% வரை விகிதங்களை இது வழங்குகிறது. 444 நாள் வைப்பு நிதி காலத்தில் அதிகபட்சமாக 7.50% கிடைக்கும்.