Connect with us

பொழுதுபோக்கு

காலில் விழாத குறைதான்: கெஞ்சிய கோபியை மதிக்காத ராதிகா; விவாகரத்து வருமா?

Published

on

Baakiyaksk

Loading

காலில் விழாத குறைதான்: கெஞ்சிய கோபியை மதிக்காத ராதிகா; விவாகரத்து வருமா?

பாக்கியலட்சுமி சீரியலில் கோபியை நிரந்தரமாக பிரிய முடிவு செய்துள்ள ராதிகா,  விகாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், கோர்ட்டில், கோபியுடன் வாழ முடியாது என்று ராதிகா திட்டவட்டமாக கூறியுள்ளார்.சின்னத்திரையின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. பாக்யா – கோபி தம்பதிக்கு 3 பிள்ளைகள் இருக்க, பாக்யாவை விவாகரத்மது செய்துவிட்டு, ராதிகாவை திருமணம் செய்துகொண்ட கோபி, கொடூர வில்லனாக மாறினார். இந்த பக்கம் பாக்யா, தனது பிஸினஸில் முன்னேறிய நிலையில், பாக்யாவை பிரிந்தாலும், எந்நேரமும் அவரது முன்னேற்றத்தை பற்றி பொறாமையில் இருந்த கோபி, ஒரு கட்டத்தில் ராதிகாவுடனான தனது வாழ்க்கையில் தோல்வியை சந்தித்தார்.அதே சமயம் கோபிக்காக, அவரது அம்மா ஈஸ்வரியின் பேச்சை தாங்கிக்கொண்ட ராதிகா, கோபியின் நடவடிக்கை பிடிக்காமல், தற்போது அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்துவிட்டார். கோபி தனது அம்மா பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்த ராதிகா, தன்னுடனும் தனது மகளுடனும் இருக்க, கோபிக்கு விருப்பம் இல்லை என்று புரிந்துகொண்டு, விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனால் கோபியின் மொத்த குடும்பமும் ஆடிப்போயுள்ளது.ஆனாலும், ஈஸ்வரி, ராதிகா குறித்து தவறாகவே கோபியிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறாள். ஆனாலும் கோபி ராதிகாவின் ஞாபகமாக இருக்கும் நிலையில், விவாகரத்து வழக்கு கோர்ட்டுக்கு வருகிறது. கோர்ட்டுக்கு வெளியில், ராதிகாவிடம் பேசும் கோபி, நீ இல்லாத ஒரு வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என்று சொல்ல, ராதிகா பாவமாக பார்க்கிறாள். அடுத்து நீதிபதி நீங்கள் இருவரும் மெட்சூர்டா இருக்கீங்க, பேசி தீர்த்துக்கொள்ளலாமே என்று கேட்கிறார்.அப்போது கோபி நான் ராதிகாவிடம பேசிவிட்டேன். அவர் மனது மாறும் என்று சொல்ல, இனிமேல் இதில் பேசுவதற்கு ஒன்றும் இல்லை. நான் இவருடன் சேர்ந்து வாழ முடியாது என்று ராதிகா பொட்டி அத்தார் போல் சொல்லிவிடுகிறாள். இதனால் கோபி அதிர்ச்சியில் பார்த்துக்கொண்டிருக்க அத்துடன் இந்த ப்ரமோ முடிகிறது. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இந்த சீரியல் எப்போது முடியும் என்பதே ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன