பொழுதுபோக்கு
மீண்டும் இணைந்த கோபி – பாக்யா: ராதிகா வில்லியா? கவனம் ஈர்க்கும் போட்டோஸ்!

மீண்டும் இணைந்த கோபி – பாக்யா: ராதிகா வில்லியா? கவனம் ஈர்க்கும் போட்டோஸ்!
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில், கோபி கேரக்டரில் நடித்து வரும் நடிகர் சதீஷ், பாக்யா கேரக்டரில் நடித்து வரும் நடிகை சுசித்ரா ஆகிய இருவரும் ஒரு குழந்தையுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.சின்னத்திரையின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இல்லத்தரசியின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த சீரியல், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தாலும், கடந்த சில வாரங்களாக கதை இல்லாமல், ஏறகனவே வந்த காட்சிகளை மீண்டும் எடுத்தது போன்ற, பழைய காட்சிகள் காரணமாக ரசிகர்கள் மத்தியில் கடுமையாக விமர்சனங்களை எதிர்கொண்டது.அதேபோல், இந்த சீரியலில், ராமமூர்த்தி கேரக்டர் இறந்துவிடுவதாக காட்சிகள் வந்தபோதே, இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதேபோல் இணையத்தில் பாக்யாலட்சுமி முடிவுக்கு வர உள்ளதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், அடுத்து கோபி திருந்துவது போலவும், எழில் படம் இயக்குவது, ராதிகா, ஈஸ்வரி மோதல், கோபியை ராதிகா விவாரத்து செய்வது என கதை சற்று சுவாரஸ்யமாக சென்றது. தற்போது கோபி மீண்டும பாக்யா வீட்டில் தங்கிவிட்டார்.ஈஸ்வரி மீண்டும் கோபி – பாக்யா இருவரையும் சேர்த்து வைக்க ப்ளான் செய்கிறார். இதனால் இப்போதைக்கு இந்த சீரியல் முடிவுக்கு வராது என்று யோசிக்க வைத்துள்ள நிலையில், தற்போது ரசிகர்களின் விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு பாக்கியலட்சுமி சீரியலின் கதையில் சற்று மாற்றம் கொண்டு வந்துள்ளனர். அதன்படி, தற்போது எழில் படத்தின் இசை வெளியீட்டு விழா, மற்றும் இனியாவின் லவ் ட்ராக் வைத்து கதை நகர்த்தப்பட்டு வருகிறது.இதனிடையே சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் நடிகர் சதீஷ், அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள பதிவில், பாக்யா கோபி இருவரும் வித்யாசமான கெட்டப்பில் கோட் படத்தில் விஜயின் மகனாக நடித்த குழந்தை நட்சத்திரத்துடன் அமர்ந்திருக்கின்றனர். இது விளம்பர பட ஷூட்டிங் என்று அவரே பதிவிட்டுள்ள நிலையில், இதை கவனிக்காத ரசிகர்கள் பாக்யா கோபி இணைந்துவிட்டார்களா? ராதிகா வில்லியா என்று கேட்டு வருகின்றனர்.