Connect with us

பொழுதுபோக்கு

காமெடி கிங் நீங்கதான்: வடிவேலுவுக்கே டஃப் கொடுப்பீங்க போல… பாக்யா ஈஸ்வரி வைரல் வீடியோ!

Published

on

baakiyala Easwari

Loading

காமெடி கிங் நீங்கதான்: வடிவேலுவுக்கே டஃப் கொடுப்பீங்க போல… பாக்யா ஈஸ்வரி வைரல் வீடியோ!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவாக நடிக்கும் சுசித்ரா, அவரது மாமியார் ஈஸ்வரி கேரக்டரில் நடித்து வரும் ராஜலட்சுமி இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்று இணைதயத்தில் வைரலாகி வருகிறது.விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், தினசரி எபிசோடுகள் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. கோபி, பாக்யா, ராதிகா ஆகிய 3 கேரக்டர்களை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல், ஒரு இல்லத்தரசியின் வாழ்க்கையை தத்ரூபமாக காட்டி வருகிறது. தொடக்கத்தில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த சீரியல், தற்போது கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.விமர்சனங்களுக்கு முக்கிய காரணம், பழைய கதையையே மீண்டும் படமாக்கியது தான். பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு, ராதிகாவை திருமணம் செய்துகொண்ட கோபி, பாக்யாவின் வளர்ச்சியில் பொறாமைப்பட்டு, அதை கெடுக்கவே சதி செய்துகொண்டிருந்தார். இதனால் சீரியலின் சமீபத்திய எபிசோடுகள், பரபரப்பை ஏற்படுத்த தவறிவிட்டது. மேலும் பாக்யாவின் மாமனார் ராமமூர்த்தி கேரக்டர் இறந்த உடனே பாக்கியலட்சுமி முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியானது.அதே சமயம் தற்போதுவரை, பாக்கியலட்சுமி சீரியல், ஓடிக்கொண்டு இருக்கிறது. இதனால் சீரியல் எப்போது முடியும் என்பதே ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. இந்த சீரியல் நட்சதிரங்கள், சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருப்பதால் அவ்வப்போது இவர்கள் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாவது வழக்கம். அந்த வகையில் தற்போது பாக்யாவும் ஈஸ்வரியும் இணைந்து வெளியிட்டுள்ள வீடியோ பதிவு இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.A post shared by Rajyalakshmi Krishnan (@rajyalakshmichandu)சீரியலில் ஆரம்பத்தில் ஈஸ்வரியின் பேச்சுக்கு எதிர்த்து பேசாத பாக்யா, தற்போது அவரின் பேச்சை எதிர்த்து பேசும் அளவுக்கு பக்கும் ஆகிவிட்ட நிலையில், இருவரும் ஜோடியாக ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வருவது அவ்வப்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது ஈஸ்வரியோடு சேர்ந்தே பாக்யா வீடியோ வெளியிட்டு இருக்கிறார். வடிவேலு மற்றும் கோவை சரளா பேசிய வீடியோவுக்கு பாக்யா, ஈஸ்வரி இருவரும், வாய்ஸ் கொடுத்துள்ளனர்.வடிவேலு ரெண்டும் ஒன்னு எத்தனை என்று கோவை சரளாவிடம் கேட்க, மூன்று என்று கோவை சரளா சொல்வார். ஆனால் அது பள்ளிக்கூடத்து கணக்கு ரெண்டும் ஒன்னும் 4 என்பது புருஷன் கணக்கு என்று வடிவேலு சொல்லுவார். அந்த காமெடிக்கு தான் இவர்கள் இருவரும் ரீல்ஸ் வெளியிட்டு இருக்கிறார்கள். இதை பலரும் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன