Connect with us

விளையாட்டு

சரிந்து விழுந்த 270 கிலோ பார்பெல்… நொறுங்கிய கழுத்து எலும்பு; சம்பவ இடத்திலே உயிரிழந்த ஜூனியர் பளு தூக்குதல் வீராங்கனை

Published

on

Gold medallist female power lifter dies after 270 kg barbell falls on neck during practice in Bikaner Tamil News

Loading

சரிந்து விழுந்த 270 கிலோ பார்பெல்… நொறுங்கிய கழுத்து எலும்பு; சம்பவ இடத்திலே உயிரிழந்த ஜூனியர் பளு தூக்குதல் வீராங்கனை

ராஜஸ்தானின் பிகானேர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பளு தூக்குதல் வீராங்கனை யாஷ்டிகா ஆச்சார்யா. 17 வயதான இவர், ஜூனியர் தேசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அசத்தி இருக்கிறார். இந்நிலையில், பளு தூக்குதல் வீராங்கனை யாஷ்டிகா ஆச்சார்யா தினமும் ஜிம்மில் பயிற்சி மேற்கொண்டு எடையைத் தூக்குவது வழக்கம். ஆங்கிலத்தில் படிக்கவும்: Gold medallist female power-lifter dies after 270-kg barbell falls on neck during practice in Bikanerஅவ்வகையில், அவர்  நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை வழக்கம் போல் தனது பயிற்சியாளருடன் ஜிம்மில் பயிற்சி மேற்கொண்டு இருக்கிறார். அப்போது அவரது கழுத்தில் 270 கிலோ எடையுள்ள பார்பெல் விழுந்ததில் இறந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். தேசிய அளவிலான போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற பளு தூக்குதல் வீராங்கனை யாஷ்டிகா ஆச்சார்யாவின் கழுத்து செவ்வாய்க்கிழமை அன்று 270 கிலோ எடையுள்ள பார்பெல் விழுந்ததில் அவரது கழுத்து உடைந்ததாக நயா ஷஹார் காவல் நிலைய அதிகாரி விக்ரம் திவாரி தெரிவித்தார். அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் சென்றும், அங்கு டாக்டர்கள் அவர் இறந்துவிட்டார் என்று கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து பேசிய போலீஸ் அதிகாரி விக்ரம் திவாரி, “ஜிம்மில் பயிற்சியாளர் யாஷ்டிகாவை எடை தூக்கும் போது விபத்து நடந்திருக்கிறது. இந்த விபத்தில் பயிற்சியாளருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக குடும்பத்தினர் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு புதன்கிழமை உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.” என்று அவர் தெரிவித்துள்ளார். ஜூனியர் தேசிய அளவிலான போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற பளு தூக்குதல் வீராங்கனை யாஷ்டிகா ஆச்சார்யா மீது  270 கிலோ எடையுள்ள பார்பெல் விழுந்ததில் கழுத்து உடைந்து பரிதமாக உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதியில் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன