விளையாட்டு
AUS vs ENG Live Score: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் – இங்கிலாந்து முதலில் பேட்டிங்

AUS vs ENG Live Score: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் – இங்கிலாந்து முதலில் பேட்டிங்
முன்னாள் சாம்பியன்கள் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தகுதி பெறாத நிலையில், இத்தொடரில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். சாம்பியன்ஸ் டிராபியில் ஒவ்வொரு ஆட்டமும் மிகவும் முக்கியமானது. ஒன்றில் தோற்றாலும் அரைஇறுதிக்குள் நுழையும் வாய்ப்புக்கு பெரும் பின்னடைவு ஏற்படும். அதனால், ஒவ்வொரு அணியும் கடுமையாக போராடும். இந்நிலையில், ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 2:30 மணிக்கு லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் தொடங்கி நடந்து வரும் 4-வது லீக் ஆட்டத்தில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள 2 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்துடன் மோதி வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் – இங்கிலாந்து முதலில் பேட்டிங் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பவுலிங் தேர்வு செய்த நிலையில், இங்கிலாந்து முதலில் பேட்டிங் ஆடி வருகிறது. நேருக்கு நேர் சர்வதேச ஒருநாள் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 161 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 91-ல் ஆஸ்திரேலியாவும், 65-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்று இருக்கின்றன. 2 ஆட்டம் ‘டை’ ஆனது. 3 ஆட்டத்தில் முடிவில்லை. சாம்பியன்ஸ் கோப்பையில் இரு அணிகளும் 5 முறை சந்தித்ததில் இங்கிலாந்து 3 முறையும், ஆஸ்திரேலியா 2 தடவையும் வென்றுள்ளன.