Connect with us

இந்தியா

புதுச்சேரி சட்டமன்ற கூட்டத்தொடர் எப்போது? சபாநாயகர் செல்வம் அறிவிப்பு

Published

on

Puducherry Assembly Budget session to commence on March 10 Speaker R Selvam Tamil News

Loading

புதுச்சேரி சட்டமன்ற கூட்டத்தொடர் எப்போது? சபாநாயகர் செல்வம் அறிவிப்பு

புதுச்சேரி 15-வது சட்டமன்ற கூட்டத்தொடர்  மார்ச் மாதம் 10-ஆம் தேதி திங்கட்கிழமை காலை 09:30 மணிக்கு கவர்னர் உரை உரையுடன் கூடுகிறது என இன்று செய்தியாளர்களிடம் சபாநாயகர் செல்வம் தெரிவித்தார்.இது குறித்து இன்று சட்டமன்றத்தில் சபாநாயகர் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-கவர்னர் கைலாஷ்நாதன் உரையுடன் சட்டசபை மார்ச் மாதம் 10 ஆம் தேதி  கூடுகிறது. புதுவை சட்டசபை கூட்டம் கடந்த 17-ந்தேதி நடந்தது. கூட்டத்தில் அரசின் 2024- 25ம் நிதியாண்டின் கூடுதல் செலவுகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. அதன்பின் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.இதனிடையே பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரானது கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். எனவே, கவர்னர் கைலாஷ் நாதனிடம் நேரம் கேட்டு கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. குறிப்பாக, மார்ச் 10 தேதி சட்டசபையை கூட்ட திட்டமிட்டு பணிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன