இலங்கை
இலங்கைச் சிறைகளில் உள்ள இந்திய மீனவர்களை உடன் விடுவியுங்கள்

இலங்கைச் சிறைகளில் உள்ள இந்திய மீனவர்களை உடன் விடுவியுங்கள்
தமிழகத்தில் உணவுத்தவிர்ப்பு
இலங்கைக் கடற்படையால் கைதுசெய்யப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி தமிழகத்தில் தவிர்ப்புப் போராட்டத்தை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்களின் ஆலோசனைக் கூட்டமொன்று நேற்று நடைபெற்றுள்ளது. இதன்போதே, இந்திய அரசாங்கத்துக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும், இலங்கைக் கடற்படைக்கும் அழுத்தத்தை வழங்கும் வகையில் இந்த உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை நடத்துவதற்கு தமிழக மீனவர்கள் தீர்மானித்துள்ளனர்.
இதன்படி, நாளைமறுதினம் வெள்ளிக்கிழமைமுதல் உணவுத் தவிர்ப்புப் போராட்டம் இடம்பெறும் என்றும், அத்துடன் காலவரையற்ற வகையில் மீன்பிடி நடவடிக்கைகளில் இருந்து விலகுவதாகவும் அந்த மீனவர்கள் அறிவித்துள்ளனர்.