Connect with us

பொழுதுபோக்கு

வெர்ஜின் இந்தியாவுடன் கூட்டணி: இணையத்தை கலக்கும் ‘பை பை பையா’; ஹிப் ஹாப் பாடல் வைரல்!

Published

on

Virgin Media Hiphop

Loading

வெர்ஜின் இந்தியாவுடன் கூட்டணி: இணையத்தை கலக்கும் ‘பை பை பையா’; ஹிப் ஹாப் பாடல் வைரல்!

வெர்ஜின் (Virgin) மியூசிக் இந்தியா கூட்டணியில் வெளியான ஹிப் ஹாப் தமிழாவின் புதிய  பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இந்திய இசை உலகில் தனித்துவம் மிக்க கலைஞர்களுக்கு ஆதரவளிக்கும் முன்னணி நிறுவனம் விர்ஜின் (Virgin) மியூசிக் இந்தியா. இந்நிறுவனம் பிரபல தமிழ் இசை கூட்டணி ஹிப் ஹாப் தமிழா உடன் இணைந்து தொடர்ச்சியான இசை அணியின் வெற்றியை கொண்டாடுகிறது. தமிழ் கலாச்சாரத்தையும், ஹிப் ஹாப் இசையையும் சிறப்பாக ஒருங்கிணைத்து, கடந்த மூன்று ஆண்டுகளில் இசை ரசிகர்களின் இதயங்களைப் பதிவு செய்து வருகிறது.இதன் காரணமாக ஹிப் ஹாப் தமிழா, விர்ஜின் மியூசிக் இந்தியாவின் ஆதரவுடன் உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது இந்த இசைக்குழுவின் இன்றைய நிலையான வெற்றி பை பை பையா (‘Bye Bye Bhaiya’) எனும் பாடல் தற்போது சென்னையில் யூடியூப் (YouTube) டிரெண்டிங்கில் 3-வது இடத்தில் உள்ளது. ஹிப் ஹாப் தமிழா எழுதி, இசையமைத்து, பாடியுள்ள இந்த பாடல் நட்பு, காதல், சமூக வலைதளங்களின் தாக்கம் போன்ற அம்சங்களை நகைச்சுவையான விதத்தில் வெளிப்படுத்துகிறது.காதல் மற்றும் உறவுப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் இளைஞர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த பாடல், அவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு மீம்ஸ் கலந்த லவ் ப்ரேக்-அப் அந்தம் எனவும் சொல்லலாம். பாடலின் உணர்வுபூர்வமான இசையும், அசத்தலான இசை வீடியோவும் ரசிகர்களிடையே பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் நம்ரிதா பரிமள், ஹர்ஷத் கான் மற்றும் சூர்யா நாராயணன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.ஹிப் ஹாப் தமிழாவின் ஆளுமையையும், வெர்ஜின் (Virgin) மியூசிக் இந்தியாவின் திறமையான மார்க்கெட்டிங் உத்திகளையும் இணைத்த இந்த வெற்றிப் பாடல், இருவருக்குமான சிறந்த இசை அணியின் வெற்றியை சுட்டிக்காட்டுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன