Connect with us

உலகம்

உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதத்தை அமெரிக்கா அளிக்காது- ட்ரம்ப் திட்டவட்டம்!

Published

on

Loading

உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதத்தை அமெரிக்கா அளிக்காது- ட்ரம்ப் திட்டவட்டம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இந்த கூட்டம் வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்றது.

Advertisement

இதன்போது உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமார் ஜெலென்ஸ்கியின் வருகையை ட்ரம்ப் உறுதிப்படுத்தினார்.

உக்ரைன் ஜனாதிபதி வோலோடோமிர் ஜெலென்ஸ்கி இன்று வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகைக்கு வருவார் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அவரது இந்த விஜயத்தின் போது அமெரிக்கா மற்றும் உக்ரைன் ஒரு விரிவான கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்று டிரம்ப் தெரிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Advertisement

மேலும் எதிர்காலத்தில் உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், ​​அமெரிக்கா எந்த உத்தரவாதத்தையும் வழங்காது என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன