இலங்கை
தவறி வீழ்ந்த மூதாட்டி சாவு!

தவறி வீழ்ந்த மூதாட்டி சாவு!
மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி வீழ்ந்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். சாம்பசிவம் தங்கம்மா (வயது 79) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சையின்போது நேற்றுமுன்தினம் இரவு காலமானார்.
இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நா.பிறேம்குமார் மேற்கொண்டார்.